அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகை: ஆளில்லா விமானம், 12 ஆயிரம் போலீஸ், பசுக்கள்-இப்படிதான் தயாராகிறது குஜராத்

டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வரவேற்க தயாராகி வருகிறது ஆமதாபாத் நகரம். திங்களன்று டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி மொடேரா அரங்கம் எனப்படும் சர்தார் பட்டேல் அரங்கத்தில் பெரும் கூட்டத்தின் முன் உரையாற்றவுள்ளனர்.

Trump Modi

டிரம்பின் இந்த பயணத்தில் அவர் சபர்மதி ஆசிரமம் செல்வது இன்னும் உறுதியாகவில்லை என்றாலும் தயாரிப்புகளில் எந்த குறையும் இல்லாமல் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. மொடேரா அரங்க நிகழ்ச்சிக்குப் பிறகு டிரம்ப் மற்றும் மோதி சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவர் எனக் குஜராத் மாநில அதிகாரிகள் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளனர். பிபிசியால் டிரம்பின் ஆசிரம வருகையை உறுதிப்படுத்த முடியவில்லை.

Trump Modi

ஆமதாபாத் நகரம் விளக்குகள் மட்டும் புதிய சுவர் பூச்சால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் முதல் மொடேரா அரங்கம் வரையிலான பாதை சுத்தப்படுத்தப்பட்டு, காவல்துறை அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் நமஸ்தே டிரம்ப் என்னும் இந்த நிகழ்ச்சியை அமெரிக்க இந்தியாவுக்கான உறவில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி என்று கூறும் வகையில் டிரம்ப், மோதி மற்றும் மெலானியா டிரம்ப் அடங்கிய பதாகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.

Trump Modi

பட மூலாதாரம், Getty Images

ஆமதாபாத் நகரம் முழுவதும் ஒரு காவல்துறை முகாம் போல மாறியுள்ளது. மோதி டிரம்ப் செல்லும் பாதையில் காவல் பணியில் ஈடுபடும் போலீஸாரின் சைரன் சத்தம் ஒலிக்கிறது.

யாரேனும் கருப்பு ஆடை அணிந்துள்ளனரா அல்லது பார்வையாளர்களுக்கென இருக்கும் பகுதியிலிருந்து ஏதேனும் பொருட்கள் வீசப்படுகிறதா போன்ற சின்ன சின்ன விஷயங்கள் கவனமாகப் பார்க்கப்படுகிறது.

டிரம்ப் மற்றும் மோதி வரும் பாதையில் பங்கேற்கும் நபர்கள் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். விமான நிலையத்திலிருந்து மொடேரா அரங்கம் வரையான் 22 கிமீ தூர பாதையில் இரு பக்கமும் இரும்பு கம்பிகளால் தடுப்புகள் போடப்பட்டுள்ளன.

Trump Modi

பட மூலாதாரம், Getty Images

ஆமதாபாத் நகர ஆணையர் 12,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக முன்னதாக தெரிவித்து இருந்தார்.

இவர்கள் போக அமெரிக்காவின் ரகசிய சேவை, தேசிய பாதுகாப்புப் படை மற்றும் சிறப்பு பாதுகாப்புக் குழு அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

Trump Modi

பட மூலாதாரம், Getty Images

அந்த பாதையில் ஏதேனும் சந்தேகத்திற்கு இடமான ஆளில்லா விமானங்கள் குறித்து சோதிப்பதற்கான தொழில்நுட்பமும், தேசியப் பாதுகாப்புப் படையின் ஆண்டி ஸ்னைப்பர் குழு ஆகியவையும் அந்த 22 கிமீட்டர் தூர பாதியில் இடம்பெற்றிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆமதாபாத் மாநகராட்சி ஆணையர் விஜய் நெர்ரா, இந்திய கலாசாரம் மற்றும் பன்முகத்தன்மையை பறைசாற்ற டிரம்பை வரவேற்கும் நிகழ்ச்சிக்கு மக்கள் திரள வேண்டும்.

Trump Modi

இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு இந்தியா ரோட் ஷோ என ஆமதாபாத் மாநகராட்சி பெயரிட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களின் கலாசாரங்களைப் பறைசாற்றும் வகையிலான மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

கால்நடை துறையும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன் விளைவாக தெருக்களில் பசுக்கள் அலைவது குறைந்துள்ளது.

விமான நிலைய பகுதியில் சுமார் 50 குரங்குகள் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டுள்ளன.

கடைக்காரர்கள் பலரிடம் திங்களன்றும் அவர்களின் கடையை மூட கோரப்பட்டுள்ளது.

மக்கள் எப்படி வருவார்கள்?

அகமதாபாத் நகரில் 16 தொகுதிகள் உள்ளன. டிரம்பின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு தொகுதி மக்களுக்கும் குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

டிரம்பின் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் மக்கள் அந்த குறிப்பிட்ட இடத்தை டிரம்பின் கான்வாய் தாண்டும் வரை அந்த இடத்தைவிட்டு செல்லக்கூடாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: