CAA, NRC: ஷாகின்பாக் - டெல்லியில் மேலும் சில இடங்களில் பரவும் போராட்டம் - நடப்பது என்ன?

பட மூலாதாரம், Getty Images
டெல்லியில் வேறு சில இடங்களிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் பரவி வருகிறது. ஜாஃப்ராபாத் ரயில் நிலையம் அமைந்துள்ள பகுதியில் பெண்கள் உள்ளிட்ட ஏறத்தாழ 800 பேர் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
ஏராளமான போலீஸார் அந்த ஜாஃப்ராபாத் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தின் காரணமாக ஜாஃப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ஷாகின்பாக்

பட மூலாதாரம், Getty Images
டெல்லி ஷாகின்பாக் பகுதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கடந்த 70 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது.
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்த குழுவினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அவர்களை சந்திக்க உள்ளனர்.
இதற்கிடையே, ஷாகின்பாக் போராட்டக்காரர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், ஷாகின்பாக் பகுதியில் போராட்டம் அமைதியாக நடந்து வருகிறது.
ஷாகின்பாக் பகுதியை சுற்றி 5 இடங்களில் போலீஸார் அடைத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாளை விசாரணை நடைபெறுகிறது.
ஷாகின்பாக் பெண்கள் போராட்டத்துக்கும், தமிழகம் கூடங்குளம், மெரினா போராட்டத்துக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது என்றால் நம்ப முடிகிறதா?
இந்தக் கட்டுரையை படியுங்கள்ஷாஹின்பாக் பெண்கள் போராட்டத்துக்கும், தமிழகத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
டெல்லியில் நடந்துவரும் ஷாகின் பாக் போராட்டத்துடன் வண்ணாரப்பேட்டை போராட்டம் ஒப்பிடப்படுகிறது. அது சரியா?
இந்தக் கட்டுரையை படியுங்கள்சென்னை வண்ணாரப்பேட்டை - டெல்லி ஷாகின்பாக்: போராட்டங்களில் என்ன ஒற்றுமை?
டெல்லி மஜூபூர்
இந்நிலையில், டெல்லி மஜூபூர் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிராகவும், ஆதரவாகவும் சில அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, CAA-வுக்கு எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களுக்கும் ஆதரித்து போராடியவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
தொடர்ந்து, போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் மாஜ்பூர் பகுதி பெரும் கலவரமாக மாறியது. இதனையடுத்து, கலவரத்தை கட்டுப்படுத்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். மோதல் காரணமாக மாஜ்பூர்-பாபர்பூர் இடையே மெட்ரோ ரயில் நிலையத்தின் கதவுகள் மூடப்பட்டன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













