நாளிதழ்களில் இன்று: டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கனடா நாட்டு இளம்பெண்
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தி இந்து (ஆங்கிலம்) : டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான கனடா நாட்டு இளம்பெண்

பட மூலாதாரம், Photofusion
தலைநகர் டெல்லியில் 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரால் கனடா நாட்டை சேர்ந்த இளம்பெண் விருந்தனர் விடுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்று ’தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கனடா நாட்டுப் பெண்ணின் வயது 20. இது தொடர்பான குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற அந்த பாதிக்கப்பட்ட பெண் அங்கிருந்து போலீஸில் புகார் அளித்துள்ளார். அப்பெண் அவரது நண்பர்களுடன் இந்தியாவிற்கு வந்ததாகவும், வேலை அல்லது படிப்பு சம்மந்தமாக அவர் வரவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி: பத்திரிகையாளர் சுஜாத் புகாரி கொலை வழக்கு

பட மூலாதாரம், SYED SHUJAAT BUKHARI/FACEBOOK
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பத்திரிகையாளர் சுஜாத் புகாரியை கொன்ற பயங்கரவாதிகள் யார் என்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் மூத்த பத்திரைகையாளரும், சைசிங் காஷ்மீர் பத்திரிகையின் ஆசிரியருமான சுஜாத் புகாரி மற்றும் அவரது இரு பாதுகாவலர்களும் கடந்த 14ஆம் தேதி சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
கொலையாளிகள் மூவரில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றும், மற்ற இருவரும் காஷ்மீரை சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளிகளை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

தினமலர்: பாலிவுட் படத்தில் ஹீரோவாகும் லாலு பிரசாத் மகன்

பட மூலாதாரம், TWITTER@TEJ PRATAP YADAV
ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரும், பிகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் பாலிவும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இவர் சுகாதாரத்துறை அமைச்சராக முந்தைய அரசில் பதவி வகித்தார். திரைப்படம் நடிப்பது தொடர்பான போஸ்டரை ட்விட்டரில் அவர் வெளியிட்டார்.
தேஜ் பிரதாப் நடிக்கும் படத்திற்கு ருத்ரா என பெயரிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












