நாளிதழ்களில் இன்று: ஊழல் நிறைந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் - ஆய்வுத் தகவல்

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தி இந்து (தமிழ்)

ஊழல் மிக்க மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் - ஆய்வில் தகவல்

பட மூலாதாரம், Getty Images

சிஎம்ஸ்-இந்தியா நிறுவனம், 'ஊழல் ஆய்வு 2018' என்ற பெயரில் பல மாநிலங்களில் அரசு சேவைகளை பொதுமக்கள் பெறுவதில் உள்ள ஊழல் பிரச்சினைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ஊழல் நிறைந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்திலும், 2-வது இடத்தில் தெலங்கானாவும், 4-வது இடத்தில் ஆந்திராவும் இருப்பதாக தெரியவந்துள்ளதாக தி இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாக ஆந்திரா, மேற்குவங்கம், கர்நாடகா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஊழலுக்கு எதிரான பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக உள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

தினமணி

நீரவ் மோதி

பட மூலாதாரம், FACEBOOK/NIRAVMODI

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முறைகேடு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட தொழிலதிபர் நீரவ் மோதி இந்தியாவிலிருந்து தப்பியோடினார். இந்நிலையில், அவர் தற்போது லண்டனில் இருப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது என்று தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூர் அரசின் கடவுச்சீட்டில் தற்போது நீரவ் மோதி லண்டனில் தங்கியிருக்கிறார் என்றும், மேலும் இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு மின்னஞ்சல் மூலம்சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சில தினங்களில் மும்பையிலுள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அவர் ஆஜராக வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

வெள்ளம்

பட மூலாதாரம், EPA

மழைக்காலங்களில் நகரத்தில் வெள்ளம் ஏற்படுவதால் உண்டாகும் சேதத்தை தவிர்க்கும் வகையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள ஏரிகளை, கூவம், அடையாறு மற்றும் கொசஸ்தலையாற்றுடன் இணைப்பதற்கான நடவடிக்கைளை தமிழ்நாடு அரசு எடுத்து வருவதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான திட்டத்தை முன்னெடுப்பதற்கு லைடார் என்ற அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: