பிரிட்டன் அரச குடும்ப திருமணம் குறித்த 5 சுவாரஸ்ய தகவல்கள்

பிரிட்டன் இளவரசர் ஹேரி மற்றும் மெகன் மார்கிலின் திருமணம் வரும் மே 19 ஆம் தேதியன்று நடக்கவுள்ளது. கோலாகலமாக நடக்க இருக்கும் அந்த திருமணம் குறித்த 5 தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

இளவரசர் ஹேரி மற்றும் மெகன் மார்கிலி

பட மூலாதாரம், Getty Images

எங்கு... எப்போது திருமணம்?

இங்கிலாந்து உள்ளூர் நேரப்படி வரும் சனிக்கிழமை மதியம் வின்ஸ்டரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடக்க உள்ளது.

புனித ஜார்ஜ் தேவாலயம்

பட மூலாதாரம், Getty Images

இந்த தேவாலயத்தில்தான் இளவரசர் ஞானஸ்நானம் பெற்றார். தேவாலயத்தின் வெளியே இருக்கும் பூங்காவில் உள்ளூர் நேரப்படி 9 மணிக்கு பொதுமக்கள் கூட தொடங்குவார்கள். 9.30 மணிக்கு வர தொடங்கும் விருந்தினர்கள் 11.15 மணிக்குள் இருக்கையில் அமர வைக்கப்படுவார்கள். 11.20-க்கு அரச குடும்பத்தினர் வருவார்கள். 12 மணிவாக்கில் திருமணம் நடைபெறும்.

யாரெல்லாம் திருமணத்தில் பங்கெடுக்கிறார்கள்?

திருமண அழைப்பிதழ்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, திருமண அழைப்பிதழ்

ஏறத்தாழ 600 பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல் அன்று மாலை நடக்க இருக்கும் திருமண வரவேற்புக்கு தனியாக 200 பேர் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மும்பையில் இயங்கும் 'மைனா மஹிளா' என்ற தொண்டு நிறுவனத்திற்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால், இந்த திருமணத்தில் மெகன் மார்கின் தந்தை தாமஸ் பங்கேற்கபோவதில்லை. இது குறித்து பல வதந்திகள் உலவினாலும், அவர் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால், உடல் நலன் காரணமாக, அவர் பங்கேற்க மாட்டார் என அரண்மனை அறிக்கை விளக்குகிறது.

திருமணத்தை நடத்தி வைக்க போவது யார்?

பேராயர் ஜஸ்டின் வெல்பி

பட மூலாதாரம், PA

ஹேரி மற்றும் மெகன் மார்கிலின் திருமணத்தை நடத்தி வைக்கப்போவது கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி.

மக்கள் என்ன உடை அணிவார்கள்?

இளவரசர் ஹேரி மற்றும் மெகன் மார்கிலி

பட மூலாதாரம், Alexi Lubomirski

திருமணத்திற்கு வருபவர்கள் என்ன மாதிரி உடை அணிய வேண்டும் என்பது அழைப்பிதழிலேயே விவரிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் கோட் சூட்டும், பெண்கள் தொப்பியுடன் கூடிய நீண்ட கவுனும் அணிய வேண்டும்.

மணமகளுக்கென பிரத்யேக ஆடை கட்டுபாடுகள் உள்ளன. அதனை காண, கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.

இந்த திருமணத்திற்கான புகைப்பட கலைஞர் யார்?

அலெக்ஸி

பட மூலாதாரம், PA

பிரிட்டனில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் அலெக்ஸி லுபொமிர்ஸ்கிதான் இந்த திருமணத்தின் அதிகாரபூர்வ புகைப்பட கலைஞர்.

ஹேரி மற்றும் மெகன் மார்கிலின் நிச்சயதார்த்த புகைப்படத்தையும் இவர்தான் எடுத்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: