குழந்தைகளை வல்லுறவு செய்பவருக்கு மரண தண்டனை - மத்திய அரசு ஒப்புதல்

குழந்தைகளை வல்லுறவு செய்பவருக்கு மரண தண்டனை - மத்திய அரசு ஒப்புதல்

பட மூலாதாரம், EPA

12 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் வகையிலான சட்டத்திருத்தத்துக்கு இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

16 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்பவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை காலமும் இதில் உயர்த்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் காஷ்மீரிலும், உத்தர பிரதேசத்திலும் நடந்த சிறுமிகள் மீதான கூட்டு பாலியல் வல்லுறவு மற்றும் கொலை சம்பவங்களை தொடர்ந்து இந்தியா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சிறுமிகள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வல்லுறவு சம்பவங்களை தடுப்பதற்குறிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

ஏற்கனவே , பல மோசமான குற்றங்களை செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது நாட்டில் நடைமுறையில் இருந்தாலும், சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்பவர்களுக்கு இதற்கு முன்புவரை மரண தண்டனை அளிக்கப்படவில்லை.

ஒரு நாளைக்கு 50 என்ற கணக்கில் கடந்த 2016ம் ஆண்டு மட்டும் நாடு முழுவதும் இதுபோன்ற 19 ஆயிரம் புகார்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

12 வயதிற்குப்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்தால் மரண தண்டனை: அவரசட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

பட மூலாதாரம், PRESS TRUST OF INDIA

புதிய சட்டம் என்ன சொல்கிறது?

பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் இன்று சனிக்கிழமை நடந்த மத்திய அமைச்சரவையின் சிறப்பு கூட்டத்தில் இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதன் மூலம், 12 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்பவர்களுக்கு மரண தண்டனையை நீதிமன்றத்தால் வழங்க முடியும்.

மேலும், 16 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்பவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை காலமும் உயர்த்தப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: