முட்டை விலை அதிகமா? கோழி விலை அதிகமா?

    • எழுதியவர், தவீனா குப்தா
    • பதவி, பிபிசி

"எல்லா முட்டைகளையும் ஒரே கூடைக்குள் வைக்காதீர்கள்," எனும் பிரபலமான சொலவடை ஒன்று உண்டு. ஆனால், இந்தியாவில் தற்போது உள்ள நிலைப்படி, பலரது வீடுகளிலும் கூடைக்குள் வைக்க முட்டைகள் இல்லை.

முட்டை விலை அதிகமா? கோழி விலை அதிகமா?

பட மூலாதாரம், Getty Images

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் முட்டை விலை சுமார் 40% அளவுக்கு அதிகரித்துள்ளது.

"முட்டை என் குழந்தைகளின் உணவில் புரத்தைச் சத்துக்கு முக்கிய ஆதாரமாக இருந்தது. ஐந்து ரூபாய்க்கு விற்ற முட்டை இப்போது ஏழு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இரண்டு முட்டைகளுக்குப் பதிலாக நான் இப்போது ஒரே முட்டையாக இப்போது நாங்கள் குறைத்துக்கொண்டோம்," என்கிறார் தீபிகா.

டெல்லியில் ஒரு சாலையோரக் கடையில் முட்டையில் தயாரிக்கப்பட்ட உணவு வகையை விற்பவர் நர்சிங். தான் விற்கும் பொருட்களுக்கு விலையை ஏற்றியுள்ளார். "என்னால் என்ன செய்ய முடியும்? முட்டை விலை ஏறிவிட்டது," என்கிறார் அந்த சிறு வியாபாரி.

30 முட்டைகளை 150 ரூபாய்க்கு வாங்கிய அவர் இப்போது 180 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது.

நர்சிங்

நாடு முழுவதும் முட்டை விலை ஏற்றத்துக்கு கூறப்படும் முக்கியக் காரணம், உற்பத்தி குறைந்ததுதான்.

நாடு முழுவதும் இதே பிரச்சனை நிலவுகிறது. "டெல்லியின் ஒரு நாளுக்கான முட்டைத் தேவை 10 லட்சம். ஆனால், இப்போது உற்பத்தியாளர்கள் அவ்வளவு முட்டைகளைத் தருவதில்லை," என்கிறார் டெல்லியில் உள்ள ஒரு முட்டை விநியோக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மானவ் குமார்.

"22 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சோளம் இப்போது 32 ரூபாய். அதனால், முட்டை உற்பத்தி செய்வதற்கு பதிலாக, கோழிகளை கறிக்கு விற்கவே பண்ணையாளர்கள் விரும்புகிறார்கள்," என்கிறார் அவர்.

காணொளிக் குறிப்பு, மாற்றுத் திறனாளிகள் நடத்தும் சைகை மொழி உணவகம்

இப்போது கறிக் கோழியின் எடையைவிட முட்டையின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ கோழிக் கறியின் விலை ரூபாய் 270. ஆனால், 30 நாட்டுக்கோழி முட்டைகளைக் கொண்ட ஒரு அட்டையின் விலை ரூபாய் 360. பிராய்லர் கோழியின் முட்டை ஏழு ரூபாய் என்றால், நாட்டுக் கோழி முட்டை 12 ரூபாய்க்கு சந்தையில் விற்கப்படுகிறது.

மொத்த விற்பனையாளர்கள் பதுக்குவதால் விலை அதிகரித்துள்ளது என்று சில சில்லறை வியாபாரிகள் கூறுகின்றனர். ஆனால், மொத்த விற்பனையாளர்கள் அதை மறுக்கிறார்கள்.

"அழுகும் தன்மை உடைய பொருளை நாங்கள் எவ்வாறு பதுக்க முடியும்? இடைத் தரகர்கள் அதிக விலை கேட்டால், நாங்கள் அவர்களுக்கு அதிகப் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. எங்களுக்கு கிடைப்பது மிகவும் குறைவான லாபம்தான், " என்கிறார் மொத்த வியாபாரியான நூர்ஜஹான்.

குளிர் சாதனக் கிடங்குகளில் வைத்தால் 20 நாட்கள் வரை நாளா நிலையில் இருக்கும் முட்டை, அப்படி சேமிக்க வசதி இல்லாததால் விரைவில் கெட்டுப்போவதாகவும் கூறுகிறார் அவர்.

நூர்ஜஹான்
படக்குறிப்பு, நூர்ஜஹான்.

"தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 4 கோடி முதல் 4.25 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படும். ஆனால், கடந்த சில நாட்களாக சுமார் 3.5 கோடி முட்டைகளே உற்பத்தி செய்யப்படுகின்றன," என்று பிபிசி தமிழிடம் தமிழ்நாடு முட்டைக் கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர், சி.ராஜேந்திரன் தெரிவித்தார்.

கடந்த கோடைகாலத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறையால் போதிய அளவு கோழிகள் குஞ்சு பொறிக்கவில்லை. அதனால் முட்டையிடும் கோழிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதால் உற்பத்தியும் குறைந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

.சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :