கிருஷ்ணா ஆற்றில் கவிழ்ந்த படகு: உயர்ந்த பலி எண்ணிக்கை!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டதில் உள்ள இப்ராஹிம்பட்டணம் ஃபரிகாட் பகுதியில் உள்ள கிருஷ்ணா நதியில், இன்று (ஞாயிற்றுகிழமை) மாலை சுற்றுலா படகு கவிழ்ந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
முன்னதாக 11 பேர் இறந்ததாக அந்திர பிரதேச டி.ஜி.பி சம்பசிவ ராவ் ஊடகங்களிடம் தெரிவித்து இருந்தார். இப்போது இந்த எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 6 பேர் பெண்கள்.
உள்துறை அமைச்சர் சின்ன ராஜப்பா இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக 5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
கவிழ்ந்த படகில் 30 பேர் பயணித்ததாக கூறப்பட்டது. ஆனால், அது இன்னும் தெளிவாக தெரியவில்லை. போலீஸார் இதுக் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
அங்கீகாரமற்ற படகு:
கிருஷ்ணா ஆற்றில் உள்ள பவானி தீவுக்கு செல்லும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கவிழ்ந்த படகு ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது.
அந்த படகிற்கு எந்த அங்கீகாரமும் இல்லை. அது சட்டத்திற்கு புறம்பாக சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றுள்ளது என்று உள்துறை அமைச்சர் கூறினார்.
இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள், "பயணிகள் அனைவரும் ஒரு பக்கமாக படகில் அமர்ந்து இருந்தனர். அதுதான் விபத்திற்கு காரணம்." என்று ஊடகங்களிடம் கூறினர்.
பிற செய்திகள்
- டெல்லியை 'விஷவாயு கூண்டு` போல மாற்றிய நச்சுப்புகை!
- 'வயசு என்னை அழகா மாத்திடுச்சு'
- கேட்டலோனியா தேர்தல்: களம் இறங்கும் ஸ்பெயின் பிரதமர்; தொடரும் மக்கள் போராட்டம்
- கிம் ஜாங் உன்னை 'குள்ளமான, குண்டு' நபர் என்று அழைத்த டிரம்ப்
- குஜராத் தேர்தல்: பாஜகவின் முன் உள்ள சவால்கள் என்ன ?
- ''செளதியில் உள்ள லெபனான் பிரதமரின் நிலை என்ன ஆனது?''
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












