டெல்லியை 'விஷவாயு கூண்டு` போல மாற்றிய நச்சுப்புகை!
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
டெல்லியில் கடந்த வாரம் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய 6 வயது சிறுவன் ஒருவன், மூச்சு திணறல் இருப்பதாக கூறிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

பட மூலாதாரம், Reuters
"பள்ளி செல்ல வேண்டாம் என்று அவன் நகைச்சுவையாக பேசுவதாக நான் எண்ணினேன். மூச்சுத் திணறல் பிரச்னை அவனுக்கு வந்ததேயில்லை" என்று அந்த சிறுவனின் தந்தை பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
சில மணிநேரங்களில், மிகவும் கடுமையாக இருமிய அந்த சிறுவன், மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டான்.
உடனடியாக வாடகை கார் பிடித்து, புகைமூட்டத்தின் ஊடாக பக்கத்திலுள்ள மருத்துவமனைக்கு அந்த சிறுவனை குடும்பத்தினர் கொண்டு சென்றார்கள்.
அந்த சிறுவன் கடும் மூச்சுக்குழாய் அழற்சியால் துன்புறுவதாக மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
அடுத்த 4 மணிநேரங்கள் அந்த சிறுவனின் சளி நிறைந்த மூச்சுக்குழாய்யை சரிசெய்ய ஊசியும், நெபுலைஸர் சிகிச்சையும் வழங்கப்பட்டது. தொடர்ந்து தொற்று ஏற்படாமல் இருக்க ஆன்டிபயோடிக்ஸ் மற்றும் ஒவ்வாமை மருந்துகள் வழங்கப்பட்டன.
"இதுவொரு மோசமான அழற்சி" என்று குறிப்பிட்ட மேக்ஸ் ஸ்மார்ட சூப்பர் ஸ்பெஸியாலிட்டி மருத்துவமனையின் நுரையீரல் நோய் சிகிச்சையின் தலைமை மருத்துவர் பிரசாந்த் சக்ஸேனா, "எனவே, அந்த சிறுவனுக்கு சற்று தீவிர சிகிச்சை அளிக்க வேண்டியதாயிற்று" என்று பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார்,
'நச்சு' காற்று
இந்த சிறுவன் குணமாக 3 நாட்கள் பிடித்தன. இருவர் அவனை மருத்துவமனையில் வைத்து நன்றாக பார்த்து கொண்டனர்.
இப்போது, நாளொன்றுக்கு இருமுறை நெபுலைஸர் மற்றும் நீராவி பிடித்தல் சிகிச்சையும், ஊசி மற்றும் ஒவ்வாமைக்கு எதிராக மருந்தும் அந்த சிறுவன் குடித்து வருகிறார்.
"இது எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவன் மிகவும் ஆரோக்கியமான சிறுவனாக இருந்து வந்தான்" என்று தந்தை கூறினார்.

பட மூலாதாரம், AFP
இந்த வாரம், காற்றில் இருந்த மிகவும் ஆபத்தான செறிவான பொருட்கள், பிஎம்2.5 அளவு நுண்ணிய துகள்கள், நம்முடைய நுரையீரலின் ஆழத்திற்கு சென்று, அதனை சேதப்படுத்தக்கூடியவை. இந்த காற்றில் இருக்கும் நுண்ணிய பொருட்களின் செறிவு கன மீட்டருக்கு 700 மைக்ரோகிராம் அளவுக்கு மிகுந்து இருந்துள்ளது.
காற்றுத்தரக் கட்டுப்பாடு பதிவுகள் தொடர்ந்து அதிகப்பட்சமாக 999ஆக இருந்துள்ளது.
இத்தகைய அமில தன்மை வாய்ந்த காற்றை சுவாசிப்பது, ஒரு நாளைக்கு 2 பாக்கெட் சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமமானது என்கிறார்கள் மருத்துவர்கள்.
"டெல்லி, மாசுப்புகை உற்பத்தி மையமாகியுள்ளதாக" முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகளின் வெளி நோயாளிகள் பிரிவுகளும், சிகிச்சை மையங்களும் இருமல் மற்றும் மூச்சு திணறல் பிரச்சனைக்ளுக்கு உள்ளான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நிறைந்து காணப்படுகின்றனர்.
இத்தகைய நோயாளிகளின் வருகை 20 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மருத்துவர் சக்ஸேனா கூறுகிறார். இதே கருத்தை அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் எல்லா மாநில மருத்துவமனைகளும் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தெளிவாக தெரியாவிட்டாலும், மருத்துவர்கள் பொது சுகாதரா அவசரநிலையை அறிவித்துள்ளனர். மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
புகைமூட்டத்துடன் கூடிய குளிர் வானிலை மிகப் பெரியதொரு ஆபத்தை விடுப்பதாக மருத்துவர் சக்ஸேனா தெரிவிக்கிறார். ஆஸ்துமா மற்றும் தீவிர மூச்சுக்குழாய் அலற்சி உள்ளவர்களுக்கு, அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும் என்கிறார் அவர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், முதல்முறையாக நகரத்தின் நான்கு மருத்துவமனைகள் சேர்ந்து ஆய்வு ஒன்றை நடத்தின. காற்றுத்தர மாறுபாடுகளும், நோயாளிகளிடம் மூச்சுத் திணறல் பிரச்சனைகள் மோசமாகுவதற்கும் தொடர்பை ஆராய்வதாக இந்த அய்வு அமைந்தது.
அவசர சிகிச்சைக்கு திரும்பி வரும் இத்தகைய நோயாளிகளின் பதிவேடுகளை வைத்திருக்க செவிலியர்கள் மருத்துவமனைகளில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அளிக்கப்படும் சிகிச்சையையும், நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதையும் ஆய்வு செய்கின்ற இவர்கள், காற்றின் தரம் வீழ்ச்சியுறும் நாட்களில் எவ்வித குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது என்பதை சோதனை செய்கிறார்கள்.
இது இந்த ஆய்வின் தொடக்கக்காலமே. அவசரகால சிகிச்சை அறை மற்றும் மருத்துவமனை அனுமதிகளுக்கு மட்டுமே இந்த ஆய்வு சுருங்கியுள்ளது. இது வெளிநோயாளிகள் பிரிவில் மூச்சுத் திணறலுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பெரிய எண்ணிக்கையிலான நோயாளிகளையும், சிறிய சிகிச்சை மையங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவதில்லை.
அப்படி இருந்தாலும், பலர் நம்புகிறபடி, மாசுபாடுள்ள சுகாதார நெருக்கடியில் நகரம் சிக்கியுள்ளதா என்பதற்கான துப்புக்களை இந்த ஆய்வு வழங்கும் என்று மருத்துவர்கள் நம்புகின்றனர்.

இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், காற்றின் தரம் குறைக்கின்ற நாட்களில், அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு வரப்படுகின்ற குழந்தைகளின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு காணப்படுவதாக என்னிடம் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் சோக்கப்பட்ட இந்த 6 வயது சிறுவனைப் போல, அவர்கள் இருமல், மூச்சுக்குழாய் அடைப்பு, நீண்டகால சளி, மூச்சித்திணறல், கண்களிலும், மூக்கிலும் எரிச்சல் போன்ற பிரச்சனைகளோடு வந்துள்ளனர்.
இது மட்டும் மிகவும் ஆச்சரியமூட்டுவதல்ல.
டெல்லியின் நச்சுக்காற்று குழந்தைகளை பாதிக்கிறது.
குழந்தைகளும், முதியோரும் மிகவும் பாதிக்கப்படுவோராவர். குழந்தைகளின் நுரையீரல் பொதுவாக பலவீனமானதாகவே காணப்படுவதால், சீக்கிரமான சேதமடைகிறது.
2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், தலைநகரிலுள்ள 10 குழந்தைகளில் 4 பேர் கடும் நுரையீரல் பிரச்சனைகளால் துன்புறுவதாக தெரிவிக்கப்பட்டது.
குழந்தைகள் வீடுகளிலே தங்கியிருக்க வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன.
பிறரும் நல்ல நிலைமையில் இல்லை. "மாசுபாடு பெரும்பாலும் நகரத்தின் "நிலையான" ஆஸ்துமா நோயாளிகளின் நிலைமையை அதிகரிக்கிறது" என்று எயிம்ஸின் நுரையீரல் சிகிச்சையாளர் கரன் மதான் தெரிவித்துள்ளார்.
இது வெளிநோயாளி பிரிவுகள் அல்லது அவசரசிகிச்சை அறைகளுக்கு அவர்களை திரும்ப செய்கிறது, நெபுலைஸேஷன் சிகிச்சை, ஸ்டீராய்டு ஊசி, ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டர் ஆகிய உதவிகளின் தேவைக்கு அவர்களை தள்ளுகிறது.
"அறிகுறிகள் மேசமாகின்றன. இதுபோன்ற ஒவ்வொரு நிகழ்வும் நீண்டகால நுரையீரல் செயலிழப்புக்கு இட்டுசெல்லும்" என்று மருத்துவர் மதான் கூறுகிறார்.
இதில் டெல்லிவாசிகள் செய்வதற்கு ஒன்றுமில்லை.
பிற செய்திகள்
- குஜராத் தேர்தல்: பாஜகவின் முன் உள்ள சவால்கள் என்ன ?
- மதகுருவைத் துருக்கியிடம் ஒப்படைக்க டிரம்பின் முன்னாள் ஆலோசகர் பணம் பெற்றாரா?
- மார்பக புற்றுநோய்: சிகிச்சை எடுத்த 15 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நோய் தாக்கும் அபாயம்?
- “ஒருவரை கத்தியால் குத்தி கொன்றேன்" - பிலிப்பைன்ஸ் அதிபரின் பேச்சால் சர்ச்சை
- இந்தியாவை 300 வருடங்களாக ஆண்ட முகலாய பேரரசரின் கடைசி வாரிசு என்ன ஆனார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












