தடையை மீறிய கொண்டாட்டங்கள்: நச்சுப்புகையின் நடுவே டெல்லி
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட பின்னரும் கூட, தீபாவளி இரவன்று வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் காற்றின் தரம் மோசமான நிலைக்கு சென்றதுடன், சில பகுதிகளை நச்சுப் புகை சூழ்ந்தது.

பட மூலாதாரம், AFP
பாதுகாப்பான மாசுபாடு அளவு என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ள அளவைவிட 11 மடங்கு மாசுபாட்டை டெல்லியியுள்ள சில இடங்கள் பதிவு செய்தன.
இம்மாதத்தின் தொடக்கத்தில், டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்கும் பொருட்டு இந்திய உச்சநீதிமன்றம் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்திருந்தது.
ஆனால், பலர் சட்டவிரோதமாக பட்டாசுகளை வாங்கினார்கள் அல்லது உச்சநீதிமன்றம் தடைவிதிப்பதற்கு முன்னதாகவே வாங்கியவற்றை அவர்கள் பயன்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் சென்ற ஆண்டு தீபாவளியின்போது இருந்த காற்றின் தரத்தை விட இந்தாண்டு நன்றாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகிலேயே மோசமாக மாசடைந்துள்ள நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியாவில் கடந்த 2015ல் ஏற்பட்ட 25 இலட்சம் இறப்புகள் மாசுபாட்டுடன் தொடர்புடையது என்று சர்வதேச ஆய்வொன்று தெரிவிக்கிறது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













