கிருஷ்ணா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 11 பேர் பலி

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டதில் உள்ள இப்ராஹிம்பட்டணம் ஃபரிகாட் பகுதியில் உள்ள கிருஷ்ணா நதியில், இன்று (ஞாயிற்றுகிழமை) மாலை சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.
இறந்தவர்களில் 6 பேர் பெண்கள், 5 பேர் ஆண்கள்.
விபத்துக்குள்ளான படகில் 38 பேர் பயணித்து இருக்கிறார்கள்.
இந்த விபத்தில் இறந்த 11 பேரும் ஓங்கோல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
தேசிய பேரிடர் மீட்பு படை ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த பகுதி விஜயவாடாவிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த சுற்றுலா படகு `ரிவர் பே` என்னும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது.
சந்திரபாபு நாயுடு வருத்தம்:

இந்த விபத்து குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வருத்தம் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணா மாவட்ட ஆட்சியரிடம் பேசிய சந்திரபாபு நாயுடு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டார்.
சுற்றுலா கழகம் தலைவர் ஜெயராம் ரெட்டி, விஜயவாடா போலீஸ் கமிஷனர் கவுதம் சவாங் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
பிற செய்திகள்
- டெல்லியை 'விஷவாயு கூண்டு` போல மாற்றிய நச்சுப்புகை!
- 'வயசு என்னை அழகா மாத்திடுச்சு'
- கேட்டலோனியா தேர்தல்: களம் இறங்கும் ஸ்பெயின் பிரதமர்; தொடரும் மக்கள் போராட்டம்
- கிம் ஜாங் உன்னை 'குள்ளமான, குண்டு' நபர் என்று அழைத்த டிரம்ப்
- குஜராத் தேர்தல்: பாஜகவின் முன் உள்ள சவால்கள் என்ன ?
- ''செளதியில் உள்ள லெபனான் பிரதமரின் நிலை என்ன ஆனது?''
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












