நடிகர்கள் அரசியல் தலைவர் ஆவதை எதிர்க்கிறாரா பிரகாஷ்ராஜ்?

நடிகர் பிரகாஷ்ராஜ்
படக்குறிப்பு, நடிகர் பிரகாஷ்ராஜ்

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் இன்று(ஞாயிற்றுகிழமை) பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகர்கள் தலைவராவது என்னுடைய நாட்டுக்குப் பேரழிவு என்று பேசியதாக செய்திகள் வெளியாகின. இந்தக் கருத்து, மறைமுகமாக ரஜினி மற்றும் கமலை பிரகாஷ்ராஜ் விமர்சிப்பதாக பேசப்பட்டது.

இந்த கருத்துக்கு சமூக ஊடகங்களில் பலர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இந்தச் சூழ்நிலையில், பிரகாஷ்ராஜ் தன்னுடைய கருத்து திரிக்கப்பட்டுள்ளதாக அவருடைய ட்விட்டர் கணக்கில் பதிவிட்டு இருக்கிறார்.

அவர், "நடிகர்கள் தங்களின் பிரபலத்தின் காரணமாக மட்டும் அரசியலுக்கு வரக்கூடாது. அது மிகப்பெரிய பேரழிவாக இருக்கும். அவர்களுக்கு, இந்த நாடு சந்திக்கும் பிரச்னைகள் குறித்து சரியான புரிதல் இருக்க வேண்டும் மற்றும் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும். நாமும் வெறும் ரசிகர்களாக மட்டும் வாக்களிக்க கூடாது. ஒரு பொறுப்பான குடிமகனாக வாக்களிக்க வேண்டும்"

இதைதான் நான் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து சொன்னேன். ஆனால், இந்த கருத்து திரிக்கப்பட்டு, தவறான பொருளில் புரிந்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது. அதை தெளிவுப்படுத்ததான் இதை பதிவிடுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

காணொளிக் குறிப்பு, விவசாயி கேட்பது பிச்சை அல்ல, உரிமை: பிரகாஷ்ராஜ்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :