ஜி.எஸ்.டி அமலானதும் 66 பொருட்களின் வரி குறையும் – அருண் ஜெட்லி

சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சிலின் 16-ஆவது கூட்டத்தில், 66 பொருட்களின் வரி விகிதத்தில் திருத்தம் செய்யலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

ஜி.எஸ்.டி அமலானதும் 66 பொருட்களின் வரி குறையும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 'ஜி.எஸ்.டி அமலானதும் 66 பொருட்களின் வரி குறையும்'

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, வரி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்ட பொருட்களின் தகவல்களை வெளியிட்டார்.

தொழிற்துறையினரின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, 133 பொருட்களில், 66 பொருட்களுடைய வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. அவற்றின் பெயர்களையும் அருண் ஜெட்லி பட்டியலிட்டார்.

'ஜி.எஸ்.டி அமலானதும் 66 பொருட்களின் வரி குறையும்'

பட மூலாதாரம், Getty Images

வரிவிகிதம் குறையும் பொருட்களில் சில-

• முந்திரி - 12 இல் இருந்து 5 சதவிகிதம்

• பொட்டலமிடப்பட்ட உணவு வகைகள் (paked foods) -18 இல் இருந்து 5 சதவிகிதம்

• ஊதுபத்தி - 12 இல் இருந்து 5 சதவிகிதம்

• பல் மருத்துவத்தில் பயன்படும் மெழுகு (Dental wax) - 28 இல் இருந்து 8 சதவிகிதம் வரி

• இன்சுலின் - 12 இல் இருந்து 5 சதவிகிதம்

• பிளாஸ்டிக் மணிகள் 28 இல் இருந்து 18 சதவிகிதம்

• பிளாஸ்டிக் தார் 28 சதவிகிதத்தில் இருந்து 18 ஆக குறைகிறது

• மாணவர்களுக்கான பள்ளிப் பைகள் 28 இல் இருந்து 18 சதவிகிதம்

• புத்தகம் - 18 இல் இருந்து 12 சதவிகிதம்

• வண்ண புத்தகங்களுக்கு வரி கிடையாது

• குழாய்களுக்கு 18 இல் இருந்து 28 சதவிகித வரி

• கத்தி போன்ற பொருட்களுக்கான வரி 18 சதவிகித்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைகிறது

• டிராக்டர் தொடர்பான பொருட்களின் மீதான வரி - 28 சதவிகிதத்தில் இருந்து 18 ஆக மாற்றியமைக்கப்படுகிறது

• கணினி அச்சுப்பொறிகள் (computer printer) மீதான 28 இல் இருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்படும்.

ஜி.எஸ்.டி அமலானதும் 66 பொருட்களின் வரி குறையும் - அருண் ஜெட்லி

பட மூலாதாரம், Getty Images

திரைப்படங்கள் மீதான கேளிக்கை வரி குறைக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டியின் கீழ் திரைப்பட கட்டணம் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய்க்கும் குறைவான கட்டணத்திற்கு 18 சதவிகித வரியும், 100 ரூபாய்க்கும் அதிகமான கட்டணங்களுக்கு 28 சதவிகித வரியும் விதிக்கப்படும்.

தற்போது கேளிக்கை வரியை மாநிலங்கள் விதிப்பதால், திரைப்பட கட்டணங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்