முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் இல்லத்தில் சி.பி.ஐ. சோதனை

பட மூலாதாரம், PTI
முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் வசித்து வரும் இல்லம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்புடைய இடங்களில் மத்தியப் புலனாய்வுத் துறை சோதனை நடத்திவருகிறது.
டெல்லி, சென்னை உட்பட கார்த்தி சிதம்பரத்திற்குச் தொடர்புடைய 8 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது
கடந்த மாதம் ஃபெமா சட்டத்தின் கீழ் கார்த்தி சிதம்பரத்திற்கும் அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஏர்செல் - மேக்சிஸ் வழக்கிலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில்தான் இந்த சோதனைகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணி முதல் நடந்து வருகின்றன.

இந்த சோதனைகள் எந்த வழக்கிற்காக, எத்தனை இடங்களில் நடக்கின்றன என்பதை சி.பி.ஐ. தெரிவிக்கவில்லை.

சோதனை நடந்துகொண்டிருந்தபோது, சிதம்பரத்தின் இல்லத்திற்கு வந்த காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் ராமசாமி, பா.ஜ.கவிற்கு சரியாகப் பதில்சொல்லக்கூடியவர் சிதம்பரம் என்பதால் அவரை மத்திய அரசு குறிவைப்பதாகவும் தமிழகத்தை தன் வசப்படுத்த பா.ஜ.க. நினைப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
இதையும் படிக்கலாம் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












