சீன கம்யூனிஸ்ட் ஆட்சியை குறைத்து மதிப்பிட்ட வழக்கறிஞருக்கு சிறை

பட மூலாதாரம், BBC CHINESE
சீனாவில் முன்னணி சட்ட நிறுவனம் ஒன்றில் முன்பு இயக்குநராக இருந்த ஒருவர் நாச வேலையில் ஈடுபட்டதாக ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சீனாவில் இந்த வாரம் மனித உரிமை வழக்கறிஞர்கள் குழு ஒன்றை சேர்ந்த முக்கிய உறுப்பினரான ஷூ ஷிஃபெங் உட்பட பலர் மீது கம்யூனிஸ்ட் ஆட்சியை குறைத்து மதிப்பீடு செய்யும் விதமாக தங்கள் கட்சிக்காரர்கள் சார்பில் கூடுதல் சட்ட சூழ்ச்சிகளை கையாண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தற்போது மூடப்பட்டுள்ள ஷூ சட்ட நிறுவனமானது, அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக தடை செய்யப்பட்ட மத குழுக்கள் மற்றும் அரசுடன் இணக்கமாக செயல்பட மறுப்பவர்களை காப்பதன் மூலம் பிரபலம் அடைந்தது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில், ஷூவின் கூட்டாளிகளான எழுத்தாளர் ஹியு ஷிகென் ஏழரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். அதே சமயம், சமூக ஆர்வலர் ஷாய் யன்மினுக்கு மூன்றாண்டு இடை நிறுத்தப்பட்ட தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.








