பெண்டகனின் இணையதளப் பாதுகாப்பு சோதனை

அமெரிக்க பாதுகாப்பு அலுவலகமான பெண்டகனின் இணையதளங்களின் பாதுகாப்பை சோதிப்பதற்காக வரவழைக்கப்பட்ட கணினி அமைப்புகளில் ஊடுருவுகின்ற ஹேக்கர்கள் 138 பாதிப்புக்களை கண்டறிந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், AFP

ஹேக் த பெண்டகன் என்ற இந்த பயிற்சியில் 1400-க்கு மேலானோர் கலந்து கொண்டனர்.

இணைய அமைப்பில் தவறுகள் இருப்பதை கண்டறிந்தோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது.

பென்டகனின் அதிமுக்கியத்தவம் வாய்ந்த வலையமைப்புகளுக்கு இந்தச் சோதனை நடத்தப்படவில்லை. பென்டகனின் பொது இணையதளங்களுக்கு மட்டுமே இந்த முன்னோடி திட்டம் நடைபெற்றது.