மிஸிஸிப்பியில் ஒருபாலுறவு குறித்த சர்ச்சைக்குரிய சட்டத்துக்கு ஆளுநர் அனுமதி

அமெரிக்காவின் மிஸிஸிப்பி மாகாணத்தில், வியாபாரம் நடத்தும் ஒருவரது மத நம்பிக்கையில் முரண்பாடு ஏற்படுமேயானால் அவர் ஒரு பாலுறவு தம்பதிக்கு தனது சேவையை வழங்க மறுக்கலாம் என்ற சட்டத்திற்கு அம்மாகாண ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பியில் ஒருபாலுறவு குறித்த சர்ச்சைக்குரிய சட்டத்துக்கு அம்மாகாண ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார்.

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பியில் ஒருபாலுறவு குறித்த சர்ச்சைக்குரிய சட்டத்துக்கு அம்மாகாண ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார்.

இந்தச் சட்டம் பாரபட்சத்திற்கு வழிசெய்யும் என்று சில அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பு வந்தபோதிலும், குடியரசுக் கட்சியின் ஆளுநர் ஃபில் பிரையண்ட் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

ஏற்கனவே உள்ள மத சுதந்திரத்திற்கான உரிமைகளைத்தான் இந்த சட்டம் மீண்டும் வலியுறுத்துவதாக பிரையண்ட் கூறியுள்ளார்.

இந்த புதிய சட்டத்தையடுத்து மிஸிஸிப்பிக்கான தவிர்க்கமுடியாத அரச பயணங்கள் தவிர மற்ற அனைத்து பயணங்களையும் நியூயார்க் மாகாண ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ ரத்து செய்துள்ளார். ஒருபாலுறவு சமூகத்தினருக்கு எதிரான வருத்தமளிக்கும் மோசமான அநீதி இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.