"அதற்கான நேரம் வந்துவிட்டது, அது செய்து முடிக்கப்படும்," - கிரீன்லாந்து பற்றி டிரம்ப் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
"டென்மார்க் செய்ய தவறியதை நாங்கள் முடித்து வைப்போம்," என கிரீன்லாந்து தொடர்பாக பேசும்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
"கிரீன்லாந்திலிருந்து ரஷ்ய அச்சுறுத்தலை நீக்குமாறு கடந்த 20 ஆண்டுகளாக நேட்டோ டென்மார்கிடம் கூறிவந்தது. துர்திருஷ்டவசமாக டென்மார்க் எதையும் செய்யவில்லை. அதற்கான நேரம் வந்துவிட்டது, அது செய்து முடிக்கப்படும்," என டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கிரீன்லாந்தை அமெரிக்கா உடன் இணைக்கும் டிரம்பின் முன்மொழிவிற்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக கிரீன்லாந்து விவகாரத்தில் எட்டு ஐரோப்பிய நாடுகள் மீது 10% கூடுதல் வரிகள் விதிக்கப்போவதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.
ஐரோப்பாவை மிரட்ட முடியாது என டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்சன், ஞாயிறு அன்று தெரிவித்தார்.



