தென் ஆப்ரிக்காவில் சரணாலயத்திலிருந்து தப்பிய சிங்கம்

தென் ஆப்ரிக்காவில் சிங்கம் ஒன்று வன விலங்கு சரணாலயம் ஒன்றிலிருந்து தப்பி வெளியே வந்து விட்டது.

பட மூலாதாரம், ALICE HUFFMAN

மனிதர்களுக்கு ஆபத்தைத் தரக்கூடிய இந்த விலங்கு இந்த சரணாலயத்திலிருந்து மின்சார வேலியின் கீழ் தவழ்ந்து வெளியே வந்துவிட்டது என்று வனத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

சில்வெஸ்டர் என்றழைக்கப்படும் இந்த சிங்கம், கடந்த ஆண்டும், இதே போல அது இருக்கும், காரோ தேசிய பூங்காவில் இருந்து தப்பி, சுமார் 300 கிமீ பரப்பளவுள்ள பகுதியில் சுற்றி, 30 விலங்குகளைக் கொன்றுவிட்டது.

பின்னர் மூன்று வாரங்கள் கழித்துத்தான், அந்த ஆண் சிங்கத்தை ஒரு ஹெலிகாப்டரிலிருந்து, மயக்க மருந்து செலுத்தப்பட்ட அம்பை ஏவி, பிடிக்கவேண்டியிருந்தது.

இந்த முறை, இந்த சிங்கத்தின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் காலர் ( வளையம்) அதற்கு அணிவிக்கப்பட்டிருப்பதால், அதை மேலும் விரைவில் பிடித்துவிடலாம் என்று வனத்துறை அதிகாரிகள் நம்புகிறார்கள்.