கிறிஸ்தவ பெண்ணின் மரணதண்டனையை இடைநிறுத்திய பாகிஸ்தான் நீதிமன்றம்

மதநிந்தனை குற்றத்துக்காக ஒரு கிறிஸ்தவ பெண்ணுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை இடைநிறுத்திய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அவரது மேன்முறையீட்டு மனுவை விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.

ஆசியா பிபி
படக்குறிப்பு, ஆசியா பிபி

முஹமது நபியை நிந்தித்ததற்காக 5 வருடங்களுக்கு முன்னதாக ஆசியா பிபி என்னும் அந்தப் பெண்ணுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

அந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த அவர், தன்னை குற்றஞ்சாட்டியை முஸ்லிம் பெண் தன் மீது கொண்ட தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக செயற்பட்டதாக கூறியுள்ளார்.

பஞ்சாப் மாகாண உயர் நீதிமன்றம் அவரது மரண தண்டனையை உறுதி செய்ததை அடுத்து, அவரது சட்டத்தரணி உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீட்டை கடந்த நவம்பரில் தாக்கல் செய்திருந்தார்.