ரயிலில் கவர்ச்சி உடை அணியும் பெண்கள்: சீனாவில் சர்ச்சை

சீனாவின் ஷாங்காய் மாநகரின் பாதாள ரயில் நிர்வாகம், பெண் பயணிகள் பார்ப்போரைக் கவருமாறு உடைகளை உடுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதை அடுத்து, சீனாவில் இணைய தளங்களில் இது குறித்து ஒரு சூடான விவாதம் நடந்து வருகிறது.
ஷாங்காய் மெட்ரோ வெளியிட்ட ஒரு விளம்பர அறிவிப்பில், பெண் ஒருத்தி, உடலின் பாகங்கள் சற்றுத் தெரியும் வண்ணம் உடுத்தியிருக்கும் படத்தின் கீழ், இது போல உடைகளை அணிவது, மன வக்கிரம் கொண்டவர்களைத் தான் ஈர்க்கும் என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
இது பொது இடங்களில் பெண்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படும் பிரச்சினைக்கு, பெண்கள் மீதே பழி போடும் செயல் என்று ஆயிரக்கணக்கான பெண் பயணிகள் கூறுகிறார்கள்.








