யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பு: ஒவ்வொரு நாளும் நடந்தது என்ன? - பிபிசி தமிழ் நேரலை செய்திகள்

பட மூலாதாரம், Reuters
தன் அண்டை நாடான யுக்ரேன் மீது பிப்ரவரி 24ம் தேதி போர் தொடுக்கத் தொடங்கியது ரஷ்யா. மிகப்பரவலான அழிவுகளையும், அகதிகள் வெளியேற்றத்தையும், பதற்றத்தையும் உண்டாக்கியுள்ள இந்தப் போர் தொடர்பாக பிபிசி செய்தியாளர்கள் தொகுத்தளிக்கும் செய்திகளை பிபிசி தமிழ் தினசரி நேரலைப் பக்கங்கள் மூலம் உடனுக்குடன் தமிழ் நேயர்களுக்கு வழங்கிவருகிறது.
போர் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு நாளும் வெளியிடப்பட்டுவரும் இந்த நேரலைப் பக்கங்கள் இந்தப் போரில் நடந்த, நடந்துகொண்டிருக்கும் அனைத்தையும் காலவரிசைப் படி பார்ப்பதற்கான ஒரு மூலாதாரமாக விளங்கும்.
இனி ஒவ்வொரு நாளின் நேரலைப் பக்கங்களும்...
முதல் நாள்: போர் தொடங்கியது
அதிகாலை நேரத்தில் திடீரென யுக்ரேன் மீது போர் தொடுத்த ரஷ்யா. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யா மீது விதித்த பொருளாதாரத் தடைகள். விமானப்படை நிலையம் அருகே நடந்த தாக்குதல். யுக்ரேனுக்குப் படைகளை அனுப்பப்போவதில்லை என அறிவித்த யுக்ரேன்.
இரண்டாம் நாள்: வீழ்ந்தது செர்னோபிள்

பட மூலாதாரம், Getty Images
யுக்ரேன் ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்தைக் கைப்பற்றும்படி யுக்ரேன் ராணுவத்துக்கு வேண்டுகோள் விடுத்தார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். மக்களிடம் ஆயுதம் கொடுத்துப் போராடச் சொன்ன யுக்ரேன் அதிபர் வோலோதிமிர் ஸெலன்ஸ்கி. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோஃப் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது.
மூன்றாம் நாள்: நாட்டைவிட்டு வெளியேற நெரிசல்
லட்சக் கணக்கில் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடையத் தொடங்கிய யுக்ரேன் மக்கள். தலைநகர் கீயவில் ஊரடங்கு. பாட்டில் வெடிகுண்டு தயாரிக்கும் பெண்கள். தலைநகர் கீயவுக்கு வெளியே நடந்த சண்டை. கண்ணுக்கு முன்பே விழுந்து வெடித்த குண்டுகள். தவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்கள். ஜெர்மனி அளிப்பதாக கூறிய ஆயுதங்கள், அடுக்கு மாடி கட்டடத்தை தாக்கிய ஏவுகணை.
நான்காம் நாள்: ஏவுகணை தாக்குதலில் வெடித்த பெட்ரோல் கிடங்கு

பட மூலாதாரம், EPA
தலைநகர் அருகே பெட்ரோல் கிடங்கு மீது ஏவுகணைத் தாக்குதல். நச்சுப் பொருள்கள் பரவும் என்ற அச்சம். கார்க்கீவ் நகருக்குள் புகுந்த ரஷ்யப்படை. படையெடுப்பால் 4,300 பேர் இறந்துள்ளதாக அறிவிப்பு. ரயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்.
(இந்தப் பக்கம் தொடர்ந்து மேம்படுத்தப்படும். யுக்ரேன் போர் தொடர்பான பிபிசி தமிழ் நேரலைச் செய்திகள் முழுவதையும் இந்தப் பக்கத்தில் பார்த்து கிளிக் செய்யலாம்.)
பிற செய்திகள்:
- ஹிஜாப்: முஸ்லிம் பெண்கள் எழுப்பும் பழமைவாதம், நாகரிகம் தொடர்பான கேள்விகள்
- சென்னை, தாம்பரத்துக்கு புதிய மேயர்கள் இவர்களா? கள நிலவரம்
- யுக்ரேன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை - கள படங்கள்
- அஜித்தின் 'வலிமை' - சினிமா விமர்சனம்
- ஏதும் விளையாத களர் நிலத்தில் விளையும் பாரம்பரிய நெல் களர்ப்பாலை: அழிவிலிருந்து காக்கும் கிராமம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












