நிறைவடைகிறது பிப்ரவரி 25ஆம் தேதி நேரலை பக்கம். இதுவரை நடந்த நிகழ்வுகளின் செய்தித் துளிகள் இதோ...
இதுவரை நடந்த நிகழ்வுகளின் செய்தித் துளிகள் இதோ...
இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
- ரஷ்ய தலைவர் விளாதிமிர் புதின் மற்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோஃப் மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இதன் மூலம் அவர்களின் ஐரோப்பிய ஒன்றிய சொத்துகள் முடக்கப்படும். ஆனால், பயண தடை விதிக்கப்படாது என பிபிசி புரிந்து கொண்டிருக்கிறது.முன்னதாக இதேபோன்ற தடையை பிரிட்டனும் புதின் மற்றும் லாவ்ரோஃப் மீது விதித்தது.
- தலைநகர் கியவில் பொதுமக்களுக்கு துப்பாக்கிகளைக் கொடுத்து ரஷ்ய படையினரை எதிர்க்குமாறு அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார்.
- ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் யுக்ரேனில் ஆளும் அதிபரின் ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றுமாறு அந்நாட்டு ராணுவத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
- யுக்ரேன் எல்லையில் இருந்து வெளியேறி ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்து வர டெல்லி மற்றும் மும்பையில் இருந்து தனி விமானங்கள் இயக்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
- யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தலைநகரை விட்டு வெளியேறியதாக ரஷ்ய ஊடகங்களில் வதந்தி பரவிய விலையில், தலைநகர் கியெவின் வீதியில் இருந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர்
- கியவின் மையப்பகுதியில் இருந்து 50 கிமீ தூரத்தில் ரஷ்ய படைகள் நிலைகொண்டிருப்பதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
- ஐ.நா அகதிகள் அமைப்பு, சுமார் 100,000 பேர் ஏற்கெனவே இடம் பெயர்ந்துள்ளதாக மதிப்பிடுகிறது. அதேநேரம், மோதல் தீவிரமடையும்போது 5 மில்லியன் பேர் வரை வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்யலாம் எனவும் நம்புகிறது.
- யுக்ரேனிய தலைநகரில் ரஷ்ய படைகள் முன்னேறும்போது, படையெடுக்கும் துருப்புகளை எதிர்க்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்யுமாறு அதிகாரிகள் மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

பட மூலாதாரம், Reuters

பட மூலாதாரம், Reuters













