யுக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு

யுக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பும் பணியை தொடங்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. வரலாற்றில் முதன்முறையாக இம்மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. இன்றைய நேரலை முடிவடைகிறது

    பிப்ரவரி 27, ஞாயிற்றுக்கிமை வெளியான யுக்ரேன் போர் தொடர்பான நேரலைப் பக்கம் முடிவடைந்தது.

    யுக்ரேனில் நடப்பவை குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.இதுவரை நடந்த நிகழ்வுகளின் செய்தித் துளிகள் இதோ...

    • யுக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பும் பணியை தொடங்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. வரலாற்றில் முதன்முறையாக இம்மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
    • யுக்ரேனுக்கு 1,000 பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் 500 ஸ்டிங்கர் ரக ஏவுகணைகளை அனுப்ப உள்ளதாக, ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஓலாஃப் ஷோட்ஸ் தெரிவித்துள்ளார்.
    • ரஷ்ய ராணுவத்தின் “அணுஆயுதப் படை பிரிவை” தயார் நிலையில் இருக்குமாறு விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
    • சர்வதேச ஜூடோ கூட்டமைப்பு, அதிபர் விளாடிமிர் புதினை கௌரவத் தலைவர் மற்றும் தூதர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது.
    • ரஷ்ய ஏவுகணைகள், யுக்ரேன் தலைநகர் கீயவ் அருகிலுள்ள வாசில்கிவில் உள்ள எண்ணெய் கிடங்கைத் தாக்கியதாக அந்த பகுதி மேயர் கூறியுள்ளார். இதனால் நச்சுப் புகை வெளியேறும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
    • ரஷ்ய வங்கிகள் சிலவற்றை நிதி தகவல் சேவை அமைப்பான ஸ்விஃப்ட் (SWFIT Global Financial Messaging System) வலைப்பின்னலில் இருந்து நீக்கிய மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு யுக்ரேன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் நன்றி தெரிவித்துள்ளார்.
    • அனானிமஸ் (Anonymous) என்ற ஹேக்கர்கள் குழு, ரஷ்ய கூட்டணி நாடான செச்சினியாவின் அரசாங்க இணையதளத்தை முடக்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை, யுக்ரைனுக்குள் ரஷ்யாவுடன் இணைந்து தங்கள் படை வீரர்களை செச்சினியா நாடு அனுப்ப உள்ளதாக அறிவித்த 12 மணி நேரத்திற்கு பிறகு நடந்துள்ளது.
    • மேற்கு கீயவில் நேற்றிரவு நடைபெற்ற துப்பாக்கிசூட்டில் 6 வயது சிறுவன் கொல்லப்பட்டதாக சிஎன்என் ஊடகம் தெரிவித்துள்ளது. இதுவரை இந்த போரில் உயிரிழந்தவர்களில் இச்சிறுவன் தான் வயதில் குறைந்த நபர்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் காலையில் மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

    தாக்குதல் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு நாளும் வெளியிடப்பட்டுவரும் இந்த நேரலைப் பக்கங்கள் இந்தப் படையெடுப்பில் நடந்த, நடந்துகொண்டிருக்கும் அனைத்தையும் காலவரிசைப் படி பார்ப்பதற்கான ஒரு மூலாதாரமாக விளங்கும்.

    • யுக்ரேன் மீது போர் தொடுத்த ரஷ்யா: முதல் நாள் போரில் நடந்தது என்ன? - நேரலை செய்தி
    • போரில் இரண்டாம் நாள் நடந்தது என்ன? நேரலைச் செய்தி
    • போரில் மூன்றாம் நாள் நடந்தது என்ன? நேரலைச் செய்தி
    • யுக்ரேன் போரின் நான்காவது நாளில் நடப்பது என்ன? - நேரலை
  2. ரஷ்யா மீது புதிய தடைகளை விதித்த ஐரோப்பிய ஒன்றியம்

    ஐரோப்பிய ஒன்றியம் தடை

    பட மூலாதாரம், பிபிசி

    ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டேர் லேயன் ரஷ்யா மீதான புதிய தடைகள் குறித்த அறிவிப்பை முன்னதாக வெளியிட்டிருந்தார்.

    ஐரோப்பிய ஒன்றியம் முதன் முறையாக தாக்குதலுக்கு உட்பட்டுள்ள ஒரு நாட்டுக்கு ஆயுதங்களை அனுப்பவுள்ளதாக உர்சுலா தெரிவித்தார்.

    மேலும் மூன்று புதிய தடைகள் குறித்த விவரத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

    ஐரோப்பிய ஒன்றியத்தின் வான்பரப்பில் அனைத்து ரஷ்ய விமாங்களும் பறக்க தடை

    “ரஷ்ய விமாங்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய வான் பரப்பில் இடமில்லை”

    “ரஷ்யாவுக்கு சொந்தமான, ரஷ்யாவால் பதிவு செய்யப்பட்ட மற்றும் ரஷ்யாவால் கட்டுப்படுத்தப்படும் அனைத்து விமானங்களுக்கும் தடை விதிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்”

    ”இந்த விமாங்கள் இனி இங்கு இறங்கவோ, டேக் ஆஃப் செய்யவோ அல்லது ஐரோப்பிய ஒன்றிய பிராந்தியத்தின் வான்பரப்பில் பறக்கவோ முடியாது”

    மேலும் இது ரஷ்ய பெரும் பணக்காரர்களின் தனியார் விமானங்களுக்கும் பொருந்தும் என்று உர்சுலா தெரிவித்துள்ளார்.

    ரஷ்ய ஊடகங்களுக்கும் தடை

    ”ரஷ்ய அரசுக்கு சொந்தமான ரஷ்யா டுடே மற்றும் ஸ்புட்நிக் போன்ற ஊடகங்கள் புதினின் போரை நியாயப்படுத்தி இனி பொய்களை பரப்ப முடியாது. அந்த பொய் தகவல்களை தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.

    பெரலாஸ் மீது தடை

    ”யுக்ரேனுக்கு எதிரான இந்த கொடூரமான போருக்கு பெலாரஸ் ஆதரவு வழங்குகிறது. பெலாரஸின் முக்கிய துறைகள் மற்றும் ஏற்றுமதி துறைகளை இலக்கு வைத்து தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.” என்றார்.

  3. விமான நிலையத்தை தாக்கிய ஏவுகணை: யுக்ரேன் அதிகாரி தகவல்

    தாக்குதல் புகைப்படம்

    பட மூலாதாரம், Zhitomir.info

    யுக்ரேன் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் ஒருவர், பெலாரஸிலிருந்து யுக்ரேனின் வடக்கு பகுதியை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக முன்னதாக தெரிவித்திருந்தார்.

    அவர் தற்போது சோடோமிர் என்ற நகரில் உள்ள விமான நிலையத்தை ஏவுகணை தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

    “பெலாரஸிலிருந்து இஸ்காண்டர் ரக ஏவுகணைகள் ஏவப்பட்டன. ரஷ்யா மற்றும் பெலாரஸை சேர்ந்த சர்வாதிகாரிகள் சோடேமிர் விமான நிலையத்தை இலக்கு வைத்தனர்” என ஆண்டன் ஹெராஷ்ஷென்கோ தெரிவித்துள்ளார்.

    யுக்ரேன் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த அதிகாரிகள் பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர் என்று யுக்ரேன் அதிபர் அலுவலகம் தெரிவித்தது. ஆனால் எப்போது என்று தெரிவிக்கவில்லை.

  4. ஸ்விஃப்ட் என்றால் என்ன?

    ஆயிரக்கணக்கான நிதி நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் சர்வதேச பணப்பரிவர்த்தனை சேவை அமைப்பான ஸ்விஃப்டில் இருந்து பல ரஷ்ய வங்கிகளை விலக்கி வைக்க ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

    இந்த நடவடிக்கையானது ரஷ்யாவின் வங்கி அமைப்பு மற்றும் ஸ்விஃப்ட் மூலமான நிதி போக்குவரத்துகளை தாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஸ்விஃப்ட், உலகளாவிய பணப் பரிவர்த்தனைக்கு முக்கியமானது.

    ரஷ்யாவின் மத்திய வங்கியின் மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும். இது வெளிநாடுகளில் தன் நிதி இருப்புகளைப் பயன்படுத்துவதற்கான திறனைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது.

    தொடக்கத்தில், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற சில நாடுகள் , ரஷ்யாவை ஸ்விஃப்ட் பயன்பாட்டிலிருந்து விலக்கிவைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள தயக்கம் காட்டின.

  5. உயிரிழப்புகளை முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ள ரஷ்யா

    ரஷ்ய ஆயுதப் படையில் உயிரிழப்புகள் ஏற்பட்டதை முதன்முறையாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் அதுகுறித்த எண்ணிக்கையை அது வெளியிடவில்லை.

    “சிறப்பு ராணுவ நடவடிக்கையின்போது ரஷ்ய ராணுவத்தினர் சிலர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் ராணுவத்தினருக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளன” என பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக டாஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

  6. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பும் ஐரோப்பிய ஒன்றியம்

    யுக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பும் பணியை தொடங்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. வரலாற்றில் முதன்முறையாக இம்மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    இன்று மதியம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டேர் லேயன் இது ஒரு “திருப்புமுனை தருணம்” என்று தெரிவித்துள்ளார்.

    ரஷ்யா மற்றும் பெலாரஸின் மீதான புதிய தடைகள் குறித்த அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். அதே போன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வான் பரப்பை ரஷ்யா பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்த மேலதிக தகவல்களுக்கு நேரலையில் தொடர்ந்து இணைந்திருங்கள்.

  7. பெலாரஸிலிருந்து யுக்ரேனுக்குள் ஏவப்பட்ட ஏவுகணைகள்

    மாலை 05.00 மணியளவில் (இந்திய நேரப்படி) இஸ்கந்தர் ஏவுகணைகள் பெலாரஸிலிருந்து யுக்ரேனுக்குள் ஏவப்பட்டதாக யுக்ரேன் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

    இது யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியின் அலுவலகத்திலிருந்து வெளியான ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை தொடர்பான அறிவிப்புக்குப் பிறகு நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அண்டண் ஹெரெஷெங்க்கோ என்பவர் வெளியிட்ட, இது தொடர்பான முகநூல் வீடியோவை இங்கே காணலாம்.

  8. ரஷ்ய படையெடுப்புக்கு எதிராக ஆர்பாட்டம்: ரஷ்யாவில் ஏராளமானோர் கைது

    மாஸ்கோவில் ஆர்ப்பாட்டத்துக்காக கைது செய்யப்படும் பெண்

    பட மூலாதாரம், AFP

    படக்குறிப்பு, மாஸ்கோவில் ஆர்ப்பாட்டத்துக்காக கைது செய்யப்படும் பெண்

    யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    அந்தவகையில், ரஷ்யா முழுவதுமுள்ள 44 நகரங்களிலிருந்து 900க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஒரு தன்னாட்சி கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.

  9. உலகின் மிகப்பெரிய போர்விமானம் தாக்கி அழிக்கப்பட்டது: யுக்ரேன் வெளியுறவுத்துறை அமைச்சர்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    ரஷ்ய படைகள் முன்னெடுத்து வந்ததில் உலகின் மிகப்பெரிய போர்விமானமான ஏ என்-255 விமானம் தாக்கி அழிக்கப்பட்டது என்று யுக்ரேன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலெபா தெரிவித்துள்ளார்.

    மேலும். " எங்கள் கனவு போர்விமானத்தை ரஷ்யா அழித்திருக்கலாம். ஆனால், வலுவான ஜனநாயக, சுதந்திரமான ஐரோப்பிய நாடாக விளங்குவது குறித்த எங்கள் கனவை அவர்களால் அழிக்க முடியாது " என்றும் தெரிவித்திருந்தார்.

  10. யுக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் நடுவே முக்கோணச் சிக்கலில் சீனா

    யுக்ரேனில் ஏற்பட்டிருக்கும் பதற்றம் அந்த நாட்டுடன் நெருக்கமான வர்த்தக உறவைக் கொண்டிருக்கும் சீனாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு பக்கம் யுக்ரேன் மறுபக்கம் ரஷ்யா என எந்தப் பக்கமும் சாய முடியாத சூழல் சீனாவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  11. அணு ஆயுதப் படை பிரிவுக்கான உத்தரவின் நோக்கம் என்ன?, கோர்டன் கொரேரா பாதுகாப்பு நிருபர், பிபிசி செய்தி

    ராணுவத்தின் “அணுஆயுதப் படை பிரிவை” தயார் நிலையில் இருக்குமாறு புதின் உத்தரவிட்டுள்ளார்.நேட்டோ நாடுகளின் "கடுமையான அறிக்கைக்கு" பிறகு ரஷ்யா இதை செய்துள்ளது.

    யுக்ரேன் மீதான தங்கள் படையெடுப்பைத் தொடங்கியவுடன், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் ஏற்கனவே ஒரு எச்சரிக்கையை வெளியிட்டிருந்தார். கடந்த வாரம், "ரஷ்யாவுக்கு இடையூறு விளைவிப்பவர்கள்", தங்கள் வரலாற்றில் கண்டிராத விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்று தெரிவித்திருந்தார். இந்த பேச்சு மேற்கத்திய நாடுகள் அவரது வழியில் நின்றால், அணு ஆயுதங்களை பயன்படுத்தப்படலாம் போன்ற அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. ஆனால் ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்தாமல் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

    உலக அளவில் அதிக அணு ஆயுதங்கள் ரஷ்யாவிடம் உள்ளது, ஆனால் அவற்றைப் பயன்படுத்தும் பட்சத்தில் ரஷ்யாவை அழிக்கும் அளவுக்கு நேட்டோவிடமும் அணு ஆயுதங்கள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  12. வந்துகொண்டிருக்கும் செய்தி, "ரஷ்யாவுடன் முன்நிபந்தனைகள் அற்ற பேச்சுவார்த்தை": யுக்ரேன் அதிபர்

    யுக்ரேன் – பெலாரஸ் எல்லையில் எந்த முன்நிபந்தனையும் இன்றி ரஷ்ய தரப்பிடம் யுக்ரேன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் என யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    இன்று காலை பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை சந்தித்த பிறகு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

    யுக்ரேனிய அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வரும்போது பெலாரஸ் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏவுகணைகள் என எதுவும் பயன்படுத்தப்படமாட்டாது என லுகாஷென்கோ உறுதியளித்துள்ளார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    முன்னதாக ஜெலன்ஸ்கி, ரஷ்ய படையெடுப்பு பெலாரஸ் எல்லையிலிருந்து தொடங்கியதால், அந்நாட்டில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என்று ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.

    இதுவரை பேச்சுவார்த்தை குறித்து ரஷ்யாவோ அல்லது பெலாரசோ எந்த அறிக்கையும் விடுக்கவில்லை.

  13. வந்துகொண்டிருக்கும் செய்தி, ரஷ்யாவின் அணு ஆயுதப் படை பிரிவுக்கு சிறப்பு உத்தரவு

    புதின்

    பட மூலாதாரம், Getty Images

    ராணுவத்தின் “அணுஆயுதப் படை பிரிவை” தயார் நிலையில் இருக்குமாறு புதின் உத்தரவிட்டுள்ளார். மூலோபாய ஏவுகணை படைக்கு இது உயரிய ஆணையாகும்.

    பாதுகாப்பு அமைச்சர் செர்கேய் ஷோகு உட்பட தனது மூத்த ராணுவ அமைச்சர்களிடம் பேசிய புதின், “மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை நோக்கிமோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. மேலும் சட்ட விரோதமான தடைகளையும் விதித்துள்ளன” என்று தெரிவித்தார்.

    மேலும் இதற்கான எதிர்வினை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

  14. யுக்ரேனிய தலைநகர் ரஷ்ய படை வீரர்கள் யாரும் இல்லை - கீயவ் மேயர் தகவல்

    கீயவ் நகரின் மேயர்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கீயவ் நகரின் மேயர்

    யுக்ரேனிய தலைநகர் கீயவில், ரஷ்ய படை வீரர்கள் யாரும் இல்லை என கீயவ் நகரின் மேயர் விட்டலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.

    அவர் கூறுகையில், "இராணுவ, சட்ட அமலாக்க மற்றும் பிராந்திய பாதுகாப்பு" அதிகாரிகள் தற்போது எதிரிகள் யாராவது கீயவ் நகரில் இருக்கிறார்களா என்று பார்வையிட்டு வருகிறார்கள். கடந்த திங்கட்கிழமை வரை, குடிமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம். அப்படி வெளியே வரும் பட்சத்தில் அவர்கள் எதிரிகளாக கருதப் படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

    கீயவ் நகரின் மேயர் தனது டெலிகிராம் செயலியில் வெளியிட்டுள்ள செய்தியில், ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, ஒரு குழந்தை உட்பட ஒன்பது பொதுமக்கள் கீயவில் "காணாவில்லை அல்லது அவர்கள் கொல்லப்பட்டோ இருக்கலாம்" என தெரிவித்துள்ளார்.

    ரஷ்ய படைவீரர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கீயவ் நகரின் புறநகர்ப் பகுதிகளில் மட்டுமே பன்முனை தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.

    பிபிசி தயாரிப்பாளர் கேத்தி லாங் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று கீயவில், ராணுவதினர் காவல்துறை மற்றும் ஆயுதமேந்திய தன்னார்வலர்கள் மட்டுமே தெருக்களில் காணப்பட்டனர் என்று கூறியுள்ளார்.

  15. யுக்ரேனிய நகரின் கார்கீவில் நடைபெற்றுவரும் மோதல்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    யுக்ரேனிய நாட்டின் கார்கீவ் நகருக்குள் ரஷ்யப் படைகள் நுழையும் போது, ​​அங்கு நடக்கும் மோதல்களின் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பிபிசியால் இந்த வீடியோ உறுதி செய்யப்பட்டுள்ளது.

    வீடியோவில், யுக்ரேனிய படைவீரர்கள் ஒரு சுவருக்கு பின்னால் மறைகிறார்கள், ஒரு யுக்ரேனிய படைவீரர் ​ தோள்பட்டை ஏவுகணைகளை ஏவுகிறார்.

    கடந்த 2019 ஆம் ஆண்டு முதல், ரஷ்ய படைவீரர்கள் பணியில் இருக்கும் போது ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ராணுவப் படை வீரர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதன் மூலம் அந்நாட்டு தேசிய பாதுகாப்பில் பிரச்னைகள் எழும்பியதை அடுத்து இந்த நடவடிக்கையை எடுத்தனர்.

    யுக்ரேனிய ராணுவ வீரர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்படும் படங்கள் மூலம், தற்போது களத்தில் என்ன நடந்து வருகிறது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.

  16. யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பு: கடந்த நான்கு நாட்கள் நடந்தது என்ன?

    யுக்ரேன்

    பட மூலாதாரம், Getty Images

    தன் அண்டை நாடான யுக்ரேன் மீது பிப்ரவரி 24ம் தேதி போர் தொடுக்கத் தொடங்கியது ரஷ்யா. மிகப்பரவலான அழிவுகளையும், அகதிகள் வெளியேற்றத்தையும், பதற்றத்தையும் உண்டாக்கியுள்ள இந்தப் போர் தொடர்பாக பிபிசி செய்தியாளர்கள் தொகுத்தளிக்கும் செய்திகளை பிபிசி தமிழ் தினசரி நேரலைப் பக்கங்கள் மூலம் உடனுக்குடன் தமிழ் நேயர்களுக்கு வழங்கிவருகிறது.

    போர் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு நாளும் வெளியிடப்பட்டுவரும் இந்த நேரலைப் பக்கங்கள் இந்தப் போரில் நடந்த, நடந்துகொண்டிருக்கும் அனைத்தையும் காலவரிசைப் படி பார்ப்பதற்கான ஒரு மூலாதாரமாக விளங்கும்.

    • யுக்ரேன் மீது போர் தொடுத்த ரஷ்யா: முதல் நாள் போரில் நடந்தது என்ன? - நேரலை செய்தி
    • போரில் இரண்டாம் நாள் நடந்தது என்ன? நேரலைச் செய்தி
    • போரில் மூன்றாம் நாள் நடந்தது என்ன? நேரலைச் செய்தி
    • யுக்ரேன் போரின் நான்காவது நாளில் நடப்பது என்ன? - நேரலை
  17. யார் இந்த விளாதிமிர் புதின் ? அதிபரான உளவாளியின் அரசியலும் அந்தரங்கமும்

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  18. யுக்ரேனுக்கு அமெரிக்கா படைகளை அனுப்பாதது ஏன்?

    அமெரிக்கா படை

    பட மூலாதாரம், Getty Images

    யுக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பல ராஜீய முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

    அமெரிக்க அரசு, வரவிருக்கும் ஆக்கிரமிப்பு பற்றியும் சர்வதேச ஒழுங்கு ஆபத்தில் உள்ளது பற்றியும் எச்சரிக்கைகளை விடுத்து வந்தது உண்மையாகியுள்ளது.

    ரஷ்யர்கள் போருக்குத் தயாராக இருந்தாலும், அமெரிக்கர்கள் சண்டையிடத் தயாராக இல்லை என்பதையும் பைடன் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், அமெரிக்க குடிமக்களை மீட்க யுக்ரேனுக்குள் படைகளை அனுப்புவதற்கும் அவர் மறுத்துவிட்டார். மேலும், அந்நாட்டில் ராணுவ ஆலோசகர்களாகவும், கண்காணிப்பாளர்களாகவும் பணியாற்றிவந்த படையினரையும்கூட திரும்ப அழைத்துக்கொண்டார்.

    அவரது பதவிக் காலத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வெளியுறவுக் கொள்கைச் சிக்கலில் அவர் ஏன் இவ்வாறு செயல்பட்டார் என்பது வியப்பளிக்கலாம்.முழுமையாக படிக்க இங்கே சொடுக்கவும்

  19. ரஷ்ய படையில் 4300 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கும் யுக்ரேன்

    யுக்ரேன்

    பட மூலாதாரம், Getty Images

    யுக்ரேனின் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார், யுக்ரேனால் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட இழப்புகளின் மதிப்பீட்டை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    படையெடுப்பின் முதல் 3 நாட்களுக்கான ஆரம்பக்கட்ட கணக்கெடுப்பு மாறுதலுக்கு உட்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் பிபிசியால் உறுதி செய்யப்பட்டது இல்லை. மேலும் ரஷ்யாவிடம் இருந்து இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • 4,300 உயிர் இறப்புகள்
    • 27 விமானங்கள்
    • 26 ஹெலிகாப்டர்கள்
    • 146 தொட்டிகள்
    • 706 கவச போர் வாகனங்கள்
    • 49 பீரங்கிகள்
    • 1 பக் வான் பாதுகாப்பு அமைப்பு
    • 4 கிரேட் மல்டிபிள் ராக்கெட் ஏவுதள அமைப்புகள் (Grad multiple rocket launch systems 30 வாகனங்கள்
    • 60 டேங்கர்கள்
    • 2 ட்ரோன்கள்
    • 2 படகுகள்
  20. யுக்ரேனில் நடக்கும் ரஷ்ய படையெடுப்பு 4வது நாளாக தொடர்கிறது

    யுக்ரேன்

    பட மூலாதாரம், Getty Images

    யுக்ரேன் மீது 4வது நாளாக தொடரும் படையெடுப்பு. இன்று இதுவரை என்ன நடந்தது என்பதை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

    • ரஷ்ய படைவீரர்கள் யுக்ரேனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ் நகருக்குள் நுழைந்துள்ளனர். அங்கு அவர்கள் தெருக்களில் யுக்ரேனிய வீரர்களுடன் சண்டையிட்டு வருகின்றனர். அதே போல யுக்ரேனின் வடகிழக்கிலுள்ள இந்த நகரத்தின் உள்ளூர் அதிகாரிகள் கூறுகையில், ரஷ்ய ராணுவ வாகனங்கள் நகரத்தின் மையத்திற்கு வந்துவிட்டதாகவும், யுக்ரேனில் உள்ள பொதுமக்கள் தங்கள் தங்குமிடங்களில் இருக்குமாறும் கூறியுள்ளனர்.
    • பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற ரஷ்யாவின் முன்மொழிவை யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி நிராகரித்துள்ளார். மேலும், ரஷ்யாவுடன் வேறு இடங்களில் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், பெலாரஸை, யுக்ரேனில் ரஷ்யா தனது படையெடுப்பைத் தொடங்க பயன்படுத்தி வருவதால், பெலாரஸில் முடியாது என்று கீயவ் இதை தெரிவித்துள்ளது.
    • இன்று காலை ரஷ்ய படைகளுக்கு எதிரான நடவடிக்கையில், யுக்ரேனிய ராணுவத்தில் சேர விரும்பும் வெளிநாட்டினருக்காக, யுக்ரேன் "சர்வதேச" தன்னார்வலர்களின் படையணியை அமைப்பதாக யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.
    • யுக்ரேன் குடிமக்கள் அமைதியான முறையில் ரஷ்ய படைகளின் முன்னேற்றத்தைத் தடுத்தனர். யுக்ரேனில் உள்ள செர்னிஹிவ் பகுதியில் உள்ளூர்வாசிகள் ரஷ்ய டாங்கர் கான்வாய்களின் அருகே கூட்டமாக மக்கள் நடந்து செல்வது போன்ற காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது பின்லாந்து மற்றும் ஐயர்லாந்து, அனைத்து ரஷ்ய விமானங்களுக்கும் அதன் வான்வெளியில் பறக்க தடையை அறிவித்துள்ளனர்.
    • இதேபோல இங்கிலாந்து மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அதே நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இதில் விரைவில் முறையான முடிவு எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியது.