யுக்ரேன் நெருக்கடி: ஜோ பைடன் அறிவித்த கூடுதல் தடைகள் - முழு விவரம்

யுக்ரேன் மீது திட்டமிட்டே ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜோ பைடன் குற்றம்சாட்டியுள்ளார். உலகம் மீது ரஷ்யாவுக்கு விஷமத்தனமான பார்வை இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். அந்த நாடு மீது அதிபர் ஜோ பைடன் கூடுதல் தடைகளை அறிவித்திருக்கிறார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. மீண்டும் சோவித் யூனியனை உருவாக்க புதினுக்கு ஆசை - ஜோ பைடன்

    ரஷ்ய அதிபர் புதினுக்கு 'மிகப் பெரிய லட்சியங்கள் உள்ளன' என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

    வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய பைடன், விளாதிமிர் புதினுக்கு யுக்ரேனின் எல்லைகளுக்கு அப்பால் வேறு "மிகப் பெரிய லட்சியங்கள்" உள்ளதாக தாம் நம்புவதாக கூறினார்.

    "புதின் உண்மையில் முன்னாள் சோவியத் யூனியனை மீண்டும் நிறுவ விரும்புகிறார்" என்று பைடன் தெரிவித்தார்.

    "அவரது லட்சியங்கள் உலகின் பிற பகுதிகள் வந்துள்ள தற்போதைய நிலைக்கு முற்றிலும் முரணானது," என்றும் அவர் கூறினார்.

    ரஷ்யாவின் பொருளாதாரம் மற்றும் பல தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தடைகள் மட்டுமின்றி புதினுக்கு எதிராக தனிப்பட்ட தடைகளை விதிக்கும் வாய்ப்பு "இன்னும் பரிசீலனையிலேயே உள்ளது" என்றும் பைடன் தெரிவித்தார்.

  2. யுக்ரேன் நெருக்கடி: கார்கிவ் அருகே விமானப்படை தளத்தில் நடந்த தாக்குதலை காட்டும் செயற்கைக்கோள் படம்

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Planet Labs

    யுக்ரேனின் கார்கிவ் அருகே உள்ள சுகுவேவ் விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடந்ததை காட்டும் செயற்கைக்கோள் பிபிசியுடன் பகிரப்பட்டுள்ளது.

    நாட்டின் கிழக்கில் உள்ள இந்த விமான தளத்தில் இருந்து புகை மேலெழும்புவதை பிளானட் லேப்ஸின் செயற்கைக்கோள் படம் காட்டுகிறது.

    யுக்ரேனை சுற்றியுள்ள விமானப்படை தளங்கள் மற்றும் பிற ராணுவ நிலைகளையும் ரஷ்யா இலக்கு வைத்து முன்னேறி வருகிறது.

  3. யுக்ரேன் நெருக்கடி: தலைநகர் அருகே ரஷ்ய படைகள் எங்கே உள்ளன?

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம்,

    யுக்ரேன் தலைநகர் கீவின் புறநகர் பகுதியில் உள்ள விமானப்படை தளத்தில் கடுமையான சண்டை நடந்து வருகிறது.

    ரஷ்ய படைகள் தங்கள் படையெடுப்பின் முதல் நாளிலேயே யுக்ரேனிய தலைநகருக்கு வெகு அருகே சென்றுள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது.

    கீவீக்கு வெளியே உள்ள ப்ரோவரியில் நடந்த வான் தாக்குதலில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    தலைநகரை நோக்கி போர்த்தளவாடங்கள் வேகமாக நகர்கின்றன. இருப்பினும் இந்த தகவல்களை மற்ற தகவல்கள் இதை உறுதிப்படுத்தவில்லை.

  4. ஜோ பைடன்: "யுக்ரேனுக்கு படைகளை அனுப்ப மாட்டோம்"

    ரஷ்யா யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம்,

    ரஷ்யா மீதான கூடுதள் தடைகள் பற்றிய விவரத்தை அறிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், யுக்ரேனுக்கு அமெரிக்க படைகளை அனுப்பப் போவதில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

    "அமெரிக்க படைகள் யுக்ரேனில் போரிட ஐரோப்பாவிற்குச் செல்லவில்லை, மாறாக நேட்டோ நட்பு நாடுகளைப் பாதுகாக்கவும், கிழக்கில் உள்ள அந்த நட்பு நாடுகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் கண்காணிப்பில் ஈடுபடவும் அனுப்பப்பட்டுள்ளன" என்று பைடன் தெரிவித்தார்.

    "அமெரிக்க சக்தியின் முழு பலத்துடன் நேட்டோ பிரதேசத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் அமெரிக்கா பாதுகாக்கும்," என்று அவர் குறிப்பிட்டார்.

    நேட்டோ முன்னெப்போதையும் விட ஒற்றுமையாக இருப்பதாக தான் நம்புவதாகவும், அமெரிக்காவும் பிற நேட்டோ நாடுகளும் தங்களுடைய ஒப்பந்த கடமைகளை நிறைவேற்றும் என்பதில் "சந்தேகமில்லை" என்றும் பைடன் தெரிவித்தார்.

    பால்டிக் பகுதியில் உள்ள லாத்வியா, எஸ்டோனியா, லித்துவேனியா, போலந்து மற்றும் ரூமேனியா உட்பட ரஷ்யாவால் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நேட்டோ நாடுகளுக்கு ஆயிரக்கணக்கான அமெரிக்க தரைப்படை மற்றும் பிற படைகள் அனுப்பப்பட்டுள்ளன என்றும் அதிபர் ஜோ பைடன் கூறினார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  5. வந்துகொண்டிருக்கும் செய்தி, ரஷ்யா மீதான அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் புதிய தடைகள் - முழு விவரம்

    வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், ரஷ்யா மீதான கூடுதல் தடைகள் பற்றி விளக்கினார். அதன் விவரம்:

    ரஷ்யா மீது நீண்டகால தாக்கத்தை அதிகரிக்கவும், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் மீதான அதன் தாக்கத்தை குறைக்கவும் வலுவான தடைகளை இனி விதிக்கவிருக்கிறோம்.

    டாலர்கள், யூரோக்கள், பவுண்டுகள், யென் போன்றவை மூலம் வணிகம் செய்யும் ரஷ்யாவின் திறனைக் கூட்டாகக் கட்டுப்படுத்த முடிவெடுத்த G7 தலைவர்களுடன் தாமும் உடன்படுவதாக அதிபர் பைடன் கூறினார்.

    ரஷ்யாவின் நிதியுதவி மற்றும் ராணுவத்தை வளர்க்கும் திறனை இனி அமெரிக்கா தடுத்து நிறுத்தும்.

    21ஆம் நூற்றாண்டின் உயர் தொழில்நுட்ப பொருளாதாரத்தில் போட்டியிடும் ரஷ்யாவின் திறனை இந்த தடைகள் குறைக்கும்.

    ரஷ்ய ரூபிள் பண மதிப்பு மிக, மிக மோசமான நிலையை அடையும். ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு பிறகு ரஷ்ய பங்குச் சந்தை இன்று வீழ்ச்சியடைந்ததையும் அதிபர் பைடன் சுட்டிக்காட்டினார்.

    "ஒரு ட்ரில்லியன் டாலர்கள் அளவுக்கு சொத்துக்களை வைத்திருக்கும் ரஷ்ய வங்கிகள் மீது இப்போது தடைகளை விதிக்கிறோம்" என்று பைடன் கூறினார்.

    "நாங்கள் ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றை ஏற்கெனவே சர்வதேச நிதி விவகாரங்களில் தலையிடாத வகையில் துண்டித்துவிட்டோம். அந்த வங்கி அந்நாட்டின் வங்கிச் சொத்துக்களில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது," என பைடன் தெரிவித்தார்.

  6. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேன் நெருக்கடி: ரஷ்யா மீது ஜோ பைடன் அறிவித்த கூடுதல் தடைகள் இதோ...

    யுக்ரேன் நெருக்கடி
    படக்குறிப்பு, ஜோ பைடன், அமெரிக்க அதிபர்

    யுக்ரேன் மீது திட்டமிட்டே தாக்குதல் நடத்தியுள்ள ரஷ்யா மற்றும் அதிபர் விளாதிமிர் புதின், இனி உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படுவர் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    யுக்ரேன் மீது ஆக்கிரமிப்பு ராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட ரஷ்யா, தலைநகர் கீவுக்குள் நுழைந்து பீரங்கி தாக்குதல் மற்றும் வெடிகுண்டுகளை வீசியதுடன் பல நகரங்களில் யுக்ரேனிய ராணுவ தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியிருக்கிறது.

    இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யா மீதான அமெரிக்காவின் நடவடிக்கைகளை விவரித்தார். அப்போது அவர் ரஷ்யாவின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தார். அதன் விவரம்:

    ரஷ்யா திட்டமிட்ட யுக்ரேன் மீது தாக்குதல் நடத்தியது.

    ரஷ்ய ராணுவம் ஆத்திரமூட்டல் அல்லாமல் நேரடியாகவே யுக்ரேன் மீது கொடூர தாக்குதலை தொடங்கியிருக்கிறது.

    இந்த தாக்குதல் திடீரென நடந்ததாக தோன்றவில்லை. இது பல மாதங்களாக நன்கு திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளது.

    1,75,00 துருப்புக்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை யுக்ரேனின் எல்லைகளுக்கு அருகே நகர்த்திய புதின் முன்னேற்பாடகவே ரத்த வங்கி போன்ற அமைப்புகளையும் அங்கே நிறுவியிருக்கிறார். போருக்கு தயாராகும் நிலைமை போல அங்கே கள மருத்துவ முகாம்களையும் நிறுவினார்.

    இதை எல்லாம் பார்க்கும்போது ரஷ்ய அதிபரின் நோக்கம் தெளிவானது. "ஆதாரமற்ற கூற்றுகள்" மற்றும் ஆத்திரமூட்டல் முயற்சிகளுடன் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் திட்டங்கள் பெரும்பாலும் அமெரிக்காவால் முன்பே கணிக்கப்பட்டது.

    ரஷ்யாவின் சாத்தியமிகு தாக்குதல் பற்றி அமெரிக்கா பல பல வாரங்களுக்கு முன்பே எச்சரிக்கைகளை விடுத்தது.

    தாக்குதலை தொடங்குவதற்கான ரஷ்ய அரசாங்க முயற்சிகளுக்கு முன்பாக, கிழக்கு யுக்ரேனில் உள்ள பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலைகள் மீது சைபர் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களை ரஷ்யா நடத்தியது.

    சர்வதேச சட்டத்தை "அப்பட்டமாக" மீறும் வகையில் ரஷ்யா ஈடுபட்டிருக்கிறது என்று ஜோ பைடன் குற்றம்சாட்டினார்.

  7. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேனிய தலைநகர் அருகே சுடப்படும் ரஷ்ய ஹெலிகாப்டர் - காணொளி

    யுக்ரேனிய தலைநகர் கீவ் அருகே தாழ்வாகப் பறந்த ரஷ்ய ஹெலிகாப்டர்கள் சுடப்படும் காணொளி வெளியாகியுள்ளது. அதில் திடீரென கூட்டமாக வரும் ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர்கள், யுக்ரேனிய படையினரால் சுடப்படுகின்றன.

    யுக்ரேனிய தலைநகருக்கு வடக்கே உள்ள வைஷ்ஹோரோட் பகுதியை கடக்கும்போது இந்த ஹெலிகாப்டர்கள் மீது கடும் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது.

    இந்த காணொளி, பிபிசியால் சரிபார்க்கப்பட்டது,. ஆனால், இதை எடுத்தவர் யார் எனத் தெரியவில்லை.

    காணொளிக் குறிப்பு, WATCH: Russian helicopters shot at by Ukrainian troops just outside Kyiv
  8. ரஷ்யா Vs யுக்ரேன்: ”அடிப்படை தேவைகள் போதுமான அளவில் இல்லை”

    யுக்ரேனில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், அங்குள்ள தங்கலுடைய நிலைமை குறித்து பிபிசி தமிழிடம் பேசினார்கள்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  9. நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்தில் இதுவரை இணைந்திருந்ததற்கு நன்றி. இத்துடன் இன்றைய நேரலைப் பக்கம் நிறைவடைகிறது. தமிழ்நாடு, இந்தியா, உலகம் முழுவதுமான செய்திகளுடன் நாளை காலை மீண்டும் நேரலைப் பக்கம் தொடங்கும்.

    இன்றைய நேரலைப் பக்கத்தின் முக்கியமான செய்திகளை கீழே காணலாம்.

    • ரஷ்ய ஆக்கிரமிப்புப் படைகள் செர்னோபில் அணுசக்தி நிலையத்தை கைப்பற்ற முயல்வதாக யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி குற்றம்சாட்டியிருக்கிறார்.
    • யுக்ரேனில் இந்திய குடிமக்கள் எங்கிருந்தாலும் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய வெளியுறவுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
    • யுக்ரேனின் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கிக்கு இந்திய தூதரகம் இன்று இரவு கடிதம் எழுதியிருக்கிறது.
    • கீஃபின் மேயர் விட்டலி கிளிட்ச்கோ நகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
    • யுக்ரேன் தலைநகர் கீஃபில் உள்ள விமான தளத்தை மூடி விட்டது. இதையடுத்து, அங்கு வசிப்பவர்கள் அந்த நகரத்தை விட்டு சாலை வழியாக பெருமளவில் வெளியேறி வருகின்றனர்.
    • யுக்ரேனுக்குள் ரஷ்யா இன்று மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து அதன் பல நகரங்களில் ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தினர்.

    மேலதிகச் செய்திகளுக்குமுகப்புப் பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  10. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேன் நெருக்கடி: இந்திய பிரதமர், ரஷ்ய அதிபருடன் பேசியது என்ன?

    இந்திய பிரதமர் நரேந்திர மோதி புதின்

    பட மூலாதாரம், Getty Images

    யுக்ரேன் நெருக்கடி விவகாரத்தில் எந்த பிரச்னையாக இருந்தாலும் பேசித் தீர்வு காணும்படி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி யோசனை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக இந்திய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோதி பேசிய விவரங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

    விளாதிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசியபோது, யுக்ரேன் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து பிரதமருக்கு புதின் விளக்கினார்.

    ரஷ்யாவிற்கும் நேட்டோ குழுவிற்கும் இடையிலான வேறுபாடுகளை நேர்மையான உரையாடல் மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்ற தனது நீண்டகால நம்பிக்கையை பிரதமர் மோதி மீண்டும் வலியுறுத்தினார்.

    வன்முறையை உடனடியாக நிறுத்துமாறு பிரதமர் மோதி வேண்டுகோள் விடுத்தார்.

    ராஜீய பேச்சுவார்த்தைகள் மற்றும் உரையாடலுக்குத் திரும்ப அனைத்து தரப்பிலிருந்தும் ஒருங்கிணைந்த முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோதி அழைப்பு விடுத்தார்.

    யுக்ரேனில் உள்ள இந்திய குடிமக்கள், குறிப்பாக மாணவர்களின் பாதுகாப்பு குறித்த இந்தியாவின் கவலைகள் குறித்தும் ரஷ்ய அதிபருக்கு பிரதமர் உணர்த்தினார்.

    மேலும் இந்தியர்கள் யுக்ரேனில் இருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கும் இந்தியாவுக்குத் திரும்புவதற்கும் இந்தியா அதிக முன்னுரிமை அளிக்கிறது என்றும் மோதி குறிப்பிட்டார்.

    இதைத்தொடர்ந்து இரு தலைவர்களும் பரஸ்பரம் ராஜீய ரீதியிலான வழக்கமான தொடர்புகளை தொடர்ந்து பராமரிக்க ஒப்புக்கொண்டனர் என்று பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மோதி திடீரென பேசியது ஏன்?

    யுக்ரேனுக்குள் ரஷ்யா இன்று மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து அதன் பல நகரங்களில் ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தினர்.

    அந்த நாட்டில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கியிருக்கின்றனர். இந்த நிலையில், ரஷ்ய அதிபருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி பேச வேண்டும் என்று டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான யுக்ரேனிய தூதர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இன்று இரவு பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவையைக் கூட்டி ஆலோசனை நடத்தினார்.

    இதில் யுக்ரேனியர்களை தாயகத்துக்கு மீட்கும் நடவடிக்கை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

  11. வந்துகொண்டிருக்கும் செய்தி, ரஷ்ய தாக்குதல் பற்றி யுக்ரேனிய அதிபர் வழங்கிய சமீபத்திய தகவல்

    யுக்ரேனிய நெருக்கடி

    பட மூலாதாரம், AFP

    படக்குறிப்பு, வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, யுக்ரேன் அதிபர்

    யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியின் சமீபத்திய தகவல் குறித்து கீஃபில் உள்ள பிபிசி செய்தியாளர் ஜேம்ஸ் வாட்டர்ஹவுஸ் வழங்கும் தகவல் இது.

    அதிபர் ஸெலென்ஸ்கி வழக்கமாக அணியும் சூட் இல்லாமல் ராணுவ பனியனுடன் இன்று பிற்பகல் தோன்றி தொலைக்காட்சி வழியாக மக்களிடம் பேசினார்.

    அப்போது அவர், நாகரிக உலகில் இருந்து ரஷ்யாவை தடுக்கும் நடவடிக்கையை மூடும் புதிய இரும்புத் திரையின் ஒலியுடன் அவர் ஒப்பிட்டார்.

    "அந்த திரை யுக்ரேனிய பிரதேசத்தில் விழாமல் இருப்பதே பார்த்துக் கொள்வதே எங்கள் பணி" என்று அவர் கூறினார்.

    ஆக்கிரமிப்பு நடவடிக்கை இடைநிறுத்தம் செய்யப்பட்டது பற்றி பேசுகையில், யுக்ரேனிய படைகள் கிழக்கு டான்பாஸ் பகுதியை வெற்றிகரமாக பாதுகாத்து வருவதாகவும், கார்கிஃப் அருகே சண்டையிட்டு வருவதாகவும் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறுகிறார்.

    நாட்டின் தெற்கே உள்ள கெர்சன் தான் மிகவும் சிக்கலான பகுதி. அங்குதான் ரஷ்யா தன்னுடன் இணைக்கப்பட்ட கிரைமியாவிலிருந்து துருப்புக்கள் வடக்கு நோக்கி நகர்ந்துள்ளன.

    வடக்கே எதிரிகள் பிராந்தியத்திற்குள் தொடர்ந்து வருவதாகவும் கூறிய அதிபர், செர்னோபில் அணுசக்தி நிலையம் அருகே கடுமையான சண்டை நடந்ததாகவும் தெரிவித்தார்.

    துருப்பு இழப்புகள் மற்றும் பிடிபட்ட ரஷ்ய வீரர்கள் பற்றியும் அதிபர் பேசியிருக்கிறார். பல ரஷ்ய விமானங்கள் மற்றும் வாகனங்கள் அழிக்கப்பட்டதாக ஸெலென்ஸ்கி கூறுகிறார், என்ன நடக்கிறது என்பதைக் கண்டு பல ரஷ்யர்கள் அதிர்ச்சியடைந்ததைக் காண்கிறோம் என்றும் அதிபர் தொலைக்காட்சியில் உரையில் பேசியதாகக் கூறுகிறார் கீஃபில் உள்ள பிபிசி செய்தியாளர் ஜேம்ஸ் வாட்டர்ஹவுஸ்.

  12. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேன் நெருக்கடி: தலைநகர் கீஃப் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிப்பு

    கீஃபின் மேயர் விட்டலி கிளிட்ச்கோ நகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக விவரித்துள்ள அவர், "நண்பர்களே! கீஃப் நகரில் இன்று முதல் ஊரடங்கு அறிமுகப்படுத்துகிறது. இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை அது அமலில் இருக்கும்," என்று தெரிவித்தார்.

    "ராணுவ ஆக்கிரமிப்பாளர்களின் நடவடிக்கைக்கு மத்தியில் யுக்ரேனில் ராணுவ சட்டம் நடைமுறையில் உள்ள தலைநகரின் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பிற்கு இது அவசியம்" என்று கிளிட்ச்கோ கூறினார்.

    ஊரடங்கு உத்தரவின் போது பொது போக்குவரத்து கிடைக்காத நிலையில், மெட்ரோ நிலையங்கள் தங்குமிடங்களாக பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

  13. வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்திய மாணவர்கள் நிலை: யுக்ரேனிய அதிபருக்கு இந்திய தூதரகம் கடிதம்

    யுக்ரேனின் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கிக்கு இந்திய தூதரகம் இன்று இரவு கடிதம் எழுதியிருக்கிறது.

    இந்த கடிதத்தின் விவரம் யுக்ரேனுக்கான இந்திய தூதரகத்தின் அலுவல்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    அதில், "யுக்ரேனின் பல்வேறு பிராந்தியங்களில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் தவித்து வருகின்றனர். அவர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கேயே இருக்க அனுமதித்து அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமானால் இந்திய தூதரகம் நன்றிக்கடன் பட்டிருக்கும்."

    "மாணவர்கள் உயிர் பிழைப்பதற்கு அத்தியாவசிய தேவைகளான உணவு மற்றும் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். அவர்களின் பாதுகாப்புதான் இந்திய தூதரகத்தின் முதன்மையான கவலை. அதை உறுதிப்படுத்த தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுங்கள்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

    இதற்கிடையே, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா டெல்லியில் இன்று இரவு செய்தியாளர்களிடம் பேசினார்.

    அப்போது அவர் யுக்ரேனில் சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் இருந்ததாகவும் அவர்களில் சுமார் நான்காயிரம் பேர் வரை தாயகத்துக்கு திருப்பி அழைத்து வரப்பட்டு விட்டனர் என்றும் கூறினார்.

    யுக்ரேனில் நிலவும் நெருக்கடி குறித்து ஒரு மாதத்துக்கு முன்பே அங்குள்ள தூதரகம் மதிப்பிட்டதால் அங்கிருந்து வெளியேறும் இந்தியர்கள் தாயகம் திரும்பி வருவதற்கான நடவடிக்கைகள் முதலிலேயே தொடங்கப்பட்டதாக ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.

    இன்றைய நிலவரப்படி, தூதரகம் சேகரித்த தகவலின்படி அந்த நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரகமாகவும் பாதுகாப்பாகவும் தாயகத்துக்கு அழைத்து வர இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்று வெளியுறவுத்துறை செயலாளர் உறுதியளித்தார்.

    தற்போது பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்தியர்களின் நிலை குறித்து ஆழமாக விவாதிக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், விரைவில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் பிரதமர் மோதி பேசுவார் என்றும் உறுதிப்படுத்தினார்.

  14. ஐரோப்பாவுக்கு எதிரான போரில் ஈடுபடும் ரஷ்யா - யுக்ரேனிய அதிபர் குற்றச்சாட்டு

    யுக்ரேன் தாக்குதல்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, யுக்ரேனிய அதிபர்

    ரஷ்ய ஆக்கிரமிப்புப் படைகள் செர்னோபில் அணுசக்தி நிலையத்தை கைப்பற்ற முயல்வதாக யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி குற்றம்சாட்டியிருக்கிறார்.

    இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் "செர்னோபில் என்பிபிபி நிலையத்தை கைப்பற்ற ஆக்கிரமிப்புப் படைகள் முயற்சிக்கின்றன. 1986ல் நடந்த சோகம் மீண்டும் நிகழாதிருக்க நமது பாதுகாவலர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து வருகிறார்கள். இது இது முழு ஐரோப்பாவிற்கும் எதிரான போர் நடவடிக்கை ஆகும்," என்று கூறியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  15. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேன் நெருக்கடி: இந்திய தூதரகம் ஒரே நாளில் வெளியிட்ட 3வது அறிவுறுத்தல்

    யுக்ரேனில் வசிக்கும் இந்திய குடிமக்களுக்கான மூன்றாவது அறிவுறுத்தல் குறிப்பை அங்குள்ள இந்திய தூதரகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.

    இதற்கு முன், இந்திய தூதரகம் இரண்டு முறை இதே போன்ற அறிவுறுத்தலை வழங்கியிருந்தது.

    அதன்படி, இந்திய குடிமக்கள் எங்கிருந்தாலும் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய வெளியுறவுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

    அந்த அறிவுறுத்தல் குறிப்பில், “யுக்ரேனில் ராணுவ சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது உங்களுக்குத் தெரியும். இதனால் நடமாட்டம் கடினமாகி விட்டது. கீஃபில் சிக்கி தங்குவதற்கு இடமில்லாமல் இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும், வேண்டிய ஏற்பாடு செய்ய அரசு நிறுவனங்களை தூதரகம் தொடர்பு கொண்டுள்ளது.

    சில இடங்களில் அபாய ஒலி, வெடிகுண்டு எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டு வருவதை நாம் அறிவோம். இதுபோன்ற சூழ்நிலையில் நீங்கள் சிக்கிக்கொண்டால், கூகுள் மேப்பில் பூமிக்கடியில் கட்டப்பட்ட வெடிகுண்டு தற்காப்பு புகலிடங்களின் பட்டியல் உள்ளது. நீங்கள் ஒருவேளை கீஃபில் இருந்தால், கேடிஎம்ஏ நகர நிர்வாகத்தை கீழ்கண்ட இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    இந்த சூழ்நிலைக்கு சாத்தியமான தீர்வை இந்திய தூதரகம் ஆராய்ந்து கொண்டிருக்கும்போது, ​​​​உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலையை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    முற்றிலும் அவசியமானால் ஒழிய உங்களுடைய வசிப்பிடத்தை விட்டு வெளியேறாதீர்கள். உங்கள் ஆவணங்களை உங்களுடன் வைத்திருக்க வேண்டும்.

    எல்லா நேரங்களிலும். அவற்றை ஒன்றாக வைத்திருங்கள் என்று அறிவுறுத்தல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தவிர, யுக்ரேனுக்கான இந்திய தூதர் பார்த்தா சத்பதியும் ஓர் காணொளியை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், "யுக்ரேனில் வசிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக வைத்திருக்க கீஃபில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. யாராவது கீஃபில் சிக்கியிருந்தாலோ, உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர், இந்திய சமூகத்தினர் மற்றும் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளவும். தூதரகம்," என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  16. வந்துகொண்டிருக்கும் செய்தி, ரஷ்ய ராணுவத்தின் பீரங்கி வாகனங்களை மட்டுப்படுத்தினோம்: யுக்ரேன்

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Alyona Shevtsova

    குலுகோஃப் பகுதியில், ஜாவ்லின் வகை பீரங்கிவண்டி எதிர்ப்பு எறிகுண்டு ஏவுகணைகளை ராணுவம் பயன்படுத்தியதாகவும், 15 ரஷ்ய டி-72 ராணுவ பீரங்கி வாகனங்களை மட்டுப்படுத்தியதாகவும், தரைப்படை தளபதிக்கான ஆலோசகர் அலியோனா ஷெவொட்சவா தெரிவித்தார்.

    பிபிசி யுக்ரேன் சேவையிலிருந்து இந்த புகைப்படத்தை உங்களுக்கு வழங்குகிறோம்.

  17. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேன் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து ரஷ்ய படையெடுப்பு பற்றிய முக்கிய தகவல்!

    யுக்ரேனின் முன்னாள் அணுசக்தி நிலையம் அமைந்துள்ள பகுதி அருகே ஆக்கிரமிப்பாளர்கள் (ரஷ்ய படையினர்) நுழைந்து விட்டதாக யுக்ரேனிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    "பெலாரூஸ் பிராந்தியத்தில் இருந்த ஆக்கிரமிப்பாளர்கள் செர்னோபில் மண்டலத்துக்குள் நுழைந்துள்ளனர்."

    அபாயகர கதிரியக்க கழிவுகளின் சேமிப்புக்கலன்கள் கொண்ட அந்த நிலையத்தை தேசிய படையினர் பாதுகாத்து வருகின்றனர்.

    அவர்கள் ஆக்கிரமிப்புப் படைகளுடன் மோதி வருவதாக யுக்ரேனிய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்த கதிரியக்க சேமிப்பு நிலையம் ஆக்கிரமிப்பாளர்களின் பீரங்கிப் படையால் அழிக்கப்பட்டால், அதில் இருந்து வெளியேறும் கதிர் வீச்சு யுக்ரேன், பெலாரூஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படரும்," என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளதாக அந்நாட்டில் உள்ள பிபிசி யுக்ரேனிய சேவை தெரிவித்துள்ளது.

  18. யுக்ரேன் - ரஷ்யா நெருக்கடி: இதுவரை நடந்தது என்ன?

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Reuters

    யுக்ரேன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை தொடர்பான அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் வழங்கிக்கொண்டிருக்கிறோம்.

    இந்த நேரலை பக்கத்தில் இப்போதுதான் இணைந்தீர்களா?

    ரஷ்ய படையெடுப்பு விவகாரத்தில் தற்போது இதுவரை என்ன நடந்தது என்பதை இங்கே அறியுங்கள்:

    ராணுவ நடவடிக்கை

    ரஷ்யe யுக்ரேனுக்குள் நுழைந்து படையெடுக்கத் தொடங்கியது. முக்கிய நகரங்களில் யுக்ரேனின் ராணுவ உள்கட்டமைப்பின் மீது ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளிவருகின்றன.

    ரஷ்யாவை சேர்ந்த “ஆக்கிரமிப்பாளர்கள்” சுமார் 50 பேரை கொன்றதாக, யுக்ரேன் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், 6 ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக யுக்ரேன் ராணுவம் தெரிவித்தது.

    ஆனால், யுக்ரேனின் இந்த கூற்று சரிபார்க்கப்படவில்லை.

    சிறு எதிர்ப்பை மட்டுமே தாங்கள் சந்தித்ததாகவும், யுக்ரேனிய படைகள், தங்கள் ஆயுதங்களை விட்டுவிட்டு திரளாக தப்பி ஓடியதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

    யுக்ரேன் நெருக்கடி

    மக்கள் மீதான தாக்கம்

    முதல் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது முதல், தலைநகர் கீஃபில் அபாய ஒலி எழுப்பப்பட்டு வருகிறது.

    யுக்ரேன் தலைநகர் கீஃபில் உள்ள விமான தளத்தை மூடி விட்டது. இதையடுத்து, அங்கு வசிப்பவர்கள் அந்த நகரத்தை விட்டு சாலை வழியாக பெருமளவில் வெளியேறி வருகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது.

    மற்ற பகுதிகளில் மக்கள் பலரும் மெட்ரோ நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். பேருந்துகள், பணம் எடுக்கும் மையங்கள், பெட்ரோல் நிலையங்களில் மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

    யுக்ரேன் எல்லையில் உள்ள போலாந்து, ஸ்லோவாகியா மற்றும் ஹங்கேரி போன்ற சில ஐரோப்பிய நாடுகள், அடைக்கலம் தேடுபவர்கள் தங்கள் நாடுகளில் நுழைவதற்கு தயாராகி வருவதாக தெரிவித்தன.

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Reuters

    சர்வதேச கண்டனங்கள்

    ரஷ்யா – யுக்ரேன் நெருக்கடி தொடர்பாக, அருகாமை நாடுகள் எதிர்வினையாற்றியுள்ளன.

    ரஷ்ய எல்லையில் உள்ள எஸ்தோனியாவின் பால்டிக் குடியரசு பிரதமர் கூறுகையில், ரஷ்யாவுடன் எல்லையை பகிர்ந்துள்ள நேட்டோ நாடுகள், நேட்டோ பிரிவு 4-ன் படி, கலந்தாலோசனை நடத்த சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறினார்.

    மால்டோவாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும், யுக்ரேன் மக்களுக்கு உதவவும் தயாராகி வருகிறது. லித்வேனியாவின் அதிபர் கிதானஸ் நவ்சேடா, அவசர நிலையை பிரகடனப்படுத்த கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்தார்.

    நேட்டோ அமைப்பின் பொது செயலாளர் யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க், “ஆக்கிரமிப்பில் இருந்து கூட்டு நாடுகளை காக்க தேவையான அனைத்தையும் மேற்கொள்வோம்” என தெரிவித்தார்.

    அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், ஜப்பான் ஆகியவை, ரஷ்யாவின் நடவடிக்கையை ஆதரிக்கும் அதன் முன்னணி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், யுக்ரேனிய ஆக்கிரமிப்பு படையெடுப்புக்கு நிதி வழங்கும் வங்கிகளுக்கு எதிராக தடைகளை விதித்துள்ளன.

    பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆற்றிய சமீபத்திய தொலைக்காட்சி உரையில், “விளாதிமிர் புதினின் அருவருக்கத்தக்க மற்றும் காட்டுமிராண்டித்தனமான முயற்சி தோல்வியில் முடிய வேண்டும்” என தெரிவித்தார்.

  19. வந்துகொண்டிருக்கும் செய்தி, கிழக்கு யுக்ரேனின் ராணுவ விமான தளத்திலிருந்து வெளியேறும் கரும்புகை

    யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், களத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் நாடு முழுவதிலும் இருந்து கள நிலவரங்களை அளித்து வருகின்றனர்.

    கிழக்கு யுக்ரேனில் உள்ள கார்கிஃப்பின் சகேவ் பகுதிக்கு அருகில் உள்ள ராணுவ விமான தளத்திலிருந்து கரும்புகை வெளியேறுவது தொடர்பான காணொளி மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

    இந்த காணொளி சரிபார்க்கப்பட்டது. ஆனால், இதை எடுத்தவர் யார் என தெரியவில்லை.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  20. யுக்ரேனிய ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி 5 பேர் உயிரிழப்பு

    யுக்ரேன்

    பட மூலாதாரம், MIA

    யுக்ரேன் ஆயுதப்படையின் ராணுவ விமானம், தலைநகர் கீஃப் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த சம்பவத்தில் 5 பேர் பலியாகினர். அந்த விமானத்தில் மொத்தம் 14 பேர் இருந்தனர்.