இன்றைய நேரலை முடிவடைகிறது - ஞாயிற்றுக்கிழமை நேரலை இணைப்பு கீழே
பிப்ரவரி 26, சனிக்கிழமை வெளியான யுக்ரேன் போர் தொடர்பான நேரலைப் பக்கம் முடிவடைந்தது. தொடர்ந்து யுக்ரேனில் நடப்பவை குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் புதிய நேரலைப் பக்கத்தில் எங்களோடு இணையுங்கள்.இதுவரை நடந்த நிகழ்வுகளின் செய்தித் துளிகள் இதோ...
- யுக்ரேன் வெளியுறவுத்துறை அமைச்சக் டிம்ட்ரோ குலேபா, ரஷ்ய பிரதேசத்தில் வெடிகுண்டை வெடிக்கச் செய்ய தனது அரசு உத்தேசித்துள்ளது என்று முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
- ரஷ்ய படைகளின் முன்னேற்றத்தைத் தடுக்கவும் அவர்களிடம் இருந்து வீடுகளையும் வீதிகளையும் பாதுகாக்கவும் அவர்கள் வீட்டிலேயே பாட்டில்கள் மூலம் நெருப்புக் குண்டுகளைத் தயாரித்திருக்கிறார்கள்.
- ரஷ்ய படைகள் நகரத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் முன்னேறியதாக பிரிட்டன் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.
- கீயவ் நகரத்தின் மேயர் சனிக்கிழமை மாலை முதல் திங்கள் காலை வரை ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளார்.
- யுக்ரேன் எல்லையில் நாட்டை விட்டுத் தப்பிக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் 27 மணி நேரமாகக் காத்திருக்கின்றனர்.
- ஜெர்மனி 1,000 டேங்கர் எதிர்ப்பு ஆயுதங்களையும் 500 “ஸ்டிங்கர்” தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணைகளையும் யுக்ரேனுக்கு அனுப்பவுள்ளதாக அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது.
- பிரிட்டன் வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் தடை செய்யப்பட வேண்டிய ரஷ்ய அரசியல் செல்வாக்கு மிகுந்த பெரும் பணக்காரர்களின் புதிய பட்டியலைத் தயாரித்துள்ளார் என்று தி சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
- தமிழக மாணவர்கள் சிலர் க்ரைமியாவுக்கு அருகில் இருக்கும் மிகொலயேவ் நகரத்திலுள்ள பெட்ரோ மொஹைலா ப்ளாக் சீ தேசிய பல்கலைக்கழகத்தின் அடித்தளத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் காலையில் மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.
பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.











