எல்லை பிரச்சனைக்கு மத்தியில் சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா?

பட மூலாதாரம், Getty Images
பெய்ஜிங்கை தலைமையிடமாக கொண்ட ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடமிருந்து நரேந்திர மோதி அரசு 9 ஆயிரம் கோடி மதிப்பிலான இரு கடன்களை பெற்றுள்ளது.
கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்க இக்கடன் பெறப்பட்டதாக மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் குமார் சிங் மற்றும் பிபி செளத்ரி மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அனுராக் தாகூர் இவ்வாறு கூறி உள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
இந்திய சீனா எல்லை பிரச்சனை சென்று கொண்டிருக்கும் போது இந்த தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியை இந்தியாவின் 1.4 ட்ரில்லியன் டாலர் திட்டமான உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்து இருந்தார்.
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இந்தியாவும் ஒரு நிறுவன உறுப்பினர். 2016 ஆம் ஆண்டு உண்டாக்கப்பட்ட அந்த வங்கியில் இந்தியாவுக்கு 7.65 சதவீத பங்கு உள்ளது, சீனாவின் பங்கு 26.63 சதவீதம்.

பட மூலாதாரம், Getty Images
மே 8 ஆம் தேதி முதல் கடன் தொகைக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இரண்டாவது கடன் தொகைக்கான ஒப்பந்தம் ஜூன்19 தேதி கையெழுத்தாகி இருக்கிறது.
அதாவது லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீன ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் பலியான நான்கு நாட்களுக்கு பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
முதல் தவணை தொகையான 3676 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் மே 8, 2020 கையெழுத்தானது. இதுவரை 1847 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. இந்த தொகை கொரோனா பெருந்தொற்றை எதிர்க்கொள்ள பயன்படுத்தப்பட்டது என அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது தவணை தொகையான 5514 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் ஜூன் 19ஆம் தேதி கையெழுத்தாகி இருக்கிறது. பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜானாவுக்காக பெறப்பட்ட கடன் தொகை இது.
சீனாவுடனான எல்லைப்பிரச்சனைக்கு மத்தியில் பெருந்தொகையை கடனாக பெற்றிருப்பது குறித்து ராகுல் காந்தி இந்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இது தொடர்பாக அவர், பகிர்ந்துள்ள ட்வீட்டில் இந்திய பிரதமர் யாருடன் இருக்கிறார் இந்தியாவுடனா அல்லது சீனாவுடனா?என கேள்வி எழுப்பி உள்ளார்.
பிற செய்திகள்:
- ”சிறந்த பேச்சாளர் அவர்” - நரேந்திர மோதியை பேட்டி எடுத்த பத்திரிகையாளர்களின் அனுபவம்
- பிரதமர் மோதி அறிவித்த 15 லட்சம் ரூபாய் வந்துவிட்டதாக மோசடி: எச்சரிக்கும் காவல்துறை
- போயிங் மேக்ஸ் 737 விமான வடிவமைப்பே விபத்துகளுக்கு காரணம் - அமெரிக்காவின் புதிய விசாரணை அறிக்கை
- நிதின் கட்கரிக்கு கொரோனா வைரஸ் - அமித் ஷா உடல்நிலையின் தற்போதைய நிலை என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












