கொரோனா வைரஸ்: ஸ்பெயினில் பணியாற்றிய பிபிசி செய்தியாளர் கூறுவது என்ன ?

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்
    • எழுதியவர், பிரதீக்‌ஷா கில்தியால்
    • பதவி, பிபிசி செய்திகள்

மார்ச் மாதத்தின் நடுவில் ஒருநாள். நான் டெல்லியில் என் வீட்டில் செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் இந்தியாவில் கொரோனா வைரஸின் அழிவு தொடங்கியிருந்தது. மக்கள் அதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் தேசிய அளவில் பெரிதாக அது கவனிக்கப்படவில்லை. ஒருவேளை இந்தியாவை தாக்கினால் நம்மால் அதை சமாளிக்க முடியுமா?

இந்தியாவில் மருத்துவ வசதிகள் குறைவாகவே உள்ளது. ஆயிரக்கணக்கில் மக்கள் இறக்க வாய்ப்புள்ளது என ஆச்சரியத்தில் இருந்தேன். அப்போது என் செல்ஃபோனுக்கு ஒரு அழைப்பு வந்தது. "ஸ்பெயினுக்கு வர முடியுமா" என என் மேலதிகாரி கேட்டார்.

ஸ்பெயின் அப்போது தான் வைரஸ் பரவுதலைத் தடுப்பதற்காக முடக்கத்தை அமல்படுத்தியிருந்தது. 6000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருந்தனர். 200 பேர் இறந்திருந்தனர்.

இந்தியாவிலிருந்து தொலைவாக இருந்த பெருந்தொற்றின் உண்மை நிலை ஸ்பெயினுக்கு மிக அருகில் இருந்தது. உலகிலேயே மிக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருந்தது ஸ்பெயின். இப்போது 25000க்கும் மேற்பட்டவர்கள் ஸ்பெயினில் இறந்துள்ளனர்.

கொரோனா வைரஸ்

நான் டெல்லி விமான நிலையத்துக்கு வந்தேன். அங்கே முகக்கவசமும் ஹேண்ட் சானிடைசர்களும் இருந்தது. அது மார்ச் மாதத்தின் இடைக்கால பகுதி. இந்தியாவில் மக்கள் வழக்கம்போல் பயணித்தார்கள். சில பேர் முகக்கவசம் அணிந்திருந்தனர். சமூக விலகல் பெரிதாக யாரும் கடைப்பிடிக்கவில்லை. விமானத்தின் அனைத்து இருக்கைகளிலும் மக்கள் அமர்ந்திருந்தனர். எங்களுக்கு உணவு அளிக்கப்பட்டது. இதை இந்த நேரத்தில் நாம் சாப்பிடலாமா என எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது.

என் அருகில் இருந்த பெண் ஒருவர் விமானத்தில் கொடுக்கப்பட்ட உணவை வேண்டாம் எனக் கூறி தான் வைத்திருந்த உணவை உண்டார். நானும் அதையே செய்திருக்கலாம் என தோன்றியது. இறுதியில் பசி வென்றது. அங்கே கொடுக்கப்பட்ட உணவை நான் சாப்பிட்டேன்.

அவசரமான நேரத்திற்கும் முன்னரே நான் மட்ரீட் வந்தடைந்தேன். நகரின் மையப்பகுதி வழியே செல்லும் போது சாலையில் ஒரு சிலரை மட்டுமே பார்த்தேன். பேருந்தில் கூட இருவர் மட்டுமே அமர்ந்து சென்றார்கள். இந்தியா வழக்கம்போல் இயங்கி கொண்டிருக்கையில் ஸ்பெயினை இவ்வாறு பார்ப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஸ்பெயினில் பணியாற்றிய பிபிசி செய்தியாளர் கூறுவது என்ன ?

எங்கள் குழுவை நான் விடுதியில் பார்த்தேன். பிறகு இந்த காலியான நகரை என் குழுவுடன் படம் பிடிக்க வெளியில் சென்றோம். கடைகளும் உணவு விடுதிகளும் மூடப்பட்டிருந்தன. மக்கள் வெள்ளத்தில் ஆரவாரமாக இருக்கும் சுற்றுலாத் தலங்கள் அமைதியாக இருந்தன. என்னுடைய முதல் ஸ்பெயின் சுற்று இப்படி இருக்கும் என நான் கற்பனை ச்ய்து பார்த்ததில்லை.

கஃபே மற்றும் பார்களில் எப்போதும் சலசலப்பு இருந்து கொண்டே இருக்கும் என நான் கேள்விபட்டிருக்கிறேன். நாம் ஒரு புதிய உலகில் நுழைந்துள்ளோம் என்பதன் அறிகுறியாக இருந்தது அந்த நாள். என் வேலையில் ஒரு இடைவெளி வந்த போதுதான் மட்ரீடில் ஒரு காஃபி கூட கிடைக்காது என்று உணர்ந்தேன்.

அடுத்த சில நாட்களில் இந்த புதிய வழக்கம் எனக்கு பழகிவிட்டது. நாங்கள் ஆர்டர் செய்த உணவை மட்டுமே விடுதியில் சாப்பிட முடிந்தது. நாங்கள் கிட்டதட்ட தினமும் ஒரு விடுதிக்கு மாறினோம். ஏனென்றால் ஒன்று விடுதியை மூடிக்கொண்டே இருந்தனர் இல்லையென்றால் அடுத்த செய்திக்காக நாங்கள் மட்ரீட் விட்டு கிளம்ப வேண்டியது ஆயிற்று. எல்லா விடுதியிலும் காலை எழுந்தவுடன் காலி செய்யும் இந்த குழப்பத்தில் நான் பல துணிகளை ஒவ்வொரு விடுதியிலும் விட்டுவிட்டேன்.

ஸ்பெயினில் பணியாற்றிய பிபிசி செய்தியாளர் கூறுவது என்ன ?

நாங்கள் பாதுகாப்பாக இருக்க பெரிதும் முயற்சித்தோம். ஸ்பெயினில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்து கொண்டிருந்தது. அனைவரும் வீட்டில் இருக்கும் அந்த நேரத்தில் எங்கள் வேலை வைரஸுக்கு நெருக்கமாக செல்வது போலவே இருந்தது.

நாங்கள் மொத்தம் நான்கு பேர் இருந்தோம். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க நாங்கள் இரு கார்கள் வாடகைக்கு எடுத்தோம். நாங்களே கரை ஓட்டினோம். அந்த காரை நாங்கள் மட்டுமே பயன்படுத்துவதையும் உறுதி செய்துகொண்டிருந்தோம்.

பாதுகாப்பாக இருக்க பயன்படுத்திய மற்றுமொரு விஷயம் பூம் மைக். அதாவது ஒரு பெரிய கம்பியில் மைக் இருக்கும். அது யாரையாவது பேட்டி எடுக்கும்போது அவர்களிடமிருந்து நம்மை தள்ளியிருக்க உதவும்.

மருத்துவமனை மற்றும் முதியவர்களை பார்த்து கொள்ளும் இல்லம் ஆகியவையே ஸ்பெயினில் தொற்று பரவுதலில் முக்கிய இடமாக இருந்தது. நாங்கள் முகக்கவசம் அணிந்திருந்தோம். கைகளை அடிக்கடி கழுவினோம், மேலும் ஹேண்ட் சானிடைசர்கள் பயன்படுத்தினோம். விடுதி கதவுகள் மற்றும் குழாய்களைத் தொடவே யோசித்தேன்.

மேலும் கிருமிநாசினி வைத்து விடுதியின் குழாய்களை சுத்தம் செய்தேன். நாங்கள் எங்கள் அறையில் யாரையும் விடக்கூடாது மேலும் நாங்களே சுத்தம் செய்து கொள்வேம் என்பதில் தெளிவாக இருந்தேன். எங்கள் அறைக்கு சுத்தம் செய்ய வந்த அந்த பெண் எங்களை ஆச்சரியமாகவும் சந்தேகமாகவும் பார்த்தார். "இது உங்கள் மற்றும் எங்கள் பாதுகாப்பிற்காக" என அவரிடன் கூறினோம்.

Banner image reading 'more about coronavirus'
Banner

ஸ்பெயினில் இருந்த இந்த 18 நாட்களில் ஒரு நாடு அழியும் நிலைக்கு வந்தது எப்படி என்பதை நான் கண்டேன். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் ஆனதால் ஐசியூ வில் ஒரு வித அழுத்தம் இருந்து கொண்டே இருந்தது. தனிமைப்படுத்தப்பட்டு இறந்தவர்களின் கதையைக் கேட்பதே மிகவும் சிரமமான ஒரு விஷயம். அவர்களுக்கு கண்ணியமான இறுதி ஊர்வலம் கூட நடக்காது. ஏனென்றால் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் மருத்துவ பணியாளர்களுக்கும் தொற்று அதிக அளவில் பரவியது. கிட்டதட்ட 12,000 பேர் அப்போது பாதிக்கப்பட்டிருந்தனர். ஹிக்னியோ டெல்காடோ ஆல்வரெஸ் என்ற ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தன் பயத்தை பதிவு செய்தார். அவருடைய பாதுகாப்பு உடை கிழைந்தாலோ, ஏதெனும் ஒரு நோயாளி அவர்மேல் விழுந்தாலோ, எனக்கும் அவருக்கும் தொற்று வந்து விடும் என அச்சம் கொண்டார். நோயாளிகளுடன் நெருக்கமாக இருக்க இருக்க உங்களுக்கு பயம் வரும் எனக் கூறினார். ஒரு நல்ல மருத்துவ வசதிகள் இல்லாத நிலை இருக்கும் நாடுகள் இந்த நிலை விவரிக்க முடியாத ஒன்று.

ஸ்பெயினில் பணியாற்றிய செய்தியாளர் கூறுவது என்ன ?

பட மூலாதாரம், Getty Images

இந்த சங்கடமான சூழ்நிலைக்கு நடுவிலும் , தன்னுடையா நாட்டு மக்களுக்காக போராடி கொண்டிருந்த மருத்துவ பணியாளர்கள், அவர்களுக்கு முகக்கவசங்கள் மற்றும் முகமூடிகள் செய்து கொடுத்த மக்கள் போன்றவர்களையும் சந்திக்க நேரிட்டது. ஒரு விடுதி மேலாளர், மருத்துவமனைகளுக்காக படுக்கைகளைக் கொடுக்க தயாராக இருந்தார். மருத்துவ பணியாளர்களுக்காக மக்கள் இரவு 8 மணிக்கு தங்கள் கைகளை தட்டி தங்கள் பாராட்டை தெரிவித்தனர்.

நான் ஸ்பெயினில் இருந்த நாட்கள் முடிந்துவிட்டது. அங்கே நோய் பாதிப்பு குறைய தொடங்கியது. ஆனால் மீண்டும் நான் நாடு திரும்ப முடியவில்லை. ஏனென்றால் இந்தியாவில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அனைத்து சர்வதேச விமானங்களையும் நிறுத்திவிட்டனர். மக்கள் தொகை அடர்த்தி மற்றும் மருத்துவ கட்டமைப்பு குறைப்பாடு ஆகியவற்றால் இந்திய அரசுக்கு வேறு வழி தெரியவில்லை.

அதனால் நான் ஸ்பெயினில் இருந்து பிபிசி தலைமை அலுவலகத்தில் நிலைமை சரியாகும் வரை இருக்கலாம் என எண்ணி பிரிட்டனுக்கு சென்றேன்.இப்போது விமானத்தில் செல்வது மிகவும் அச்சமிகுந்ததாக இருந்தது. மட்ரீட் விமான நிலையத்தில் சமூக விலகல் கடைப்பிடிப்பது மிகவும் அவசியமானது. அடிக்கடி அறிவிப்பு கேட்டுக்கொண்டிருந்தது. விமானம் கிட்டதட்ட காலியாக இருந்தது. லண்டன் வந்தபோது முதன்முறையாக ஹீத்ரோ விமான நிலையத்தில் இறங்கும் போது நான் ஒருவர் மட்டும் இருந்தேன்.

ஸ்பெயினில் பணியாற்றிய செய்தியாளர் கூறுவது என்ன ?

பட மூலாதாரம், Getty Images

ஸ்பெயினில் இருந்ததால் நான் லண்டணில் தனிமைப்படுத்தப்பட்டேன். ஸ்பெயினில் இருந்த அனைத்தையும் பிரிட்டனிலும் கண்டேன். மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடை இல்லாதது, தாமதமாக முடக்கம் அறிவித்தது, பரிசோதனை கருவிகள் இல்லாதது, அரசியல் தலைவர்களிடம் போதுமான பதில்கள் இல்லாதது என பல குற்றசாட்டுகள் இருந்தன. ஐரோப்பாவின் பல நாடுகளில் இருக்கும் முறையின் மாதிரியை போன்றே இருந்தது.

அதே சமயத்தில் இந்தியாவில் முடக்கம் நீட்டிக்கப்பட்டது. எப்போது நான் மீண்டும் வீடு வந்து சேருவேன் எனத் தெரியவில்லை. இப்போது ஒரு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது. இந்தியாவின் கடுமையான முடக்கத்தில் இருக்கும் என் கணவரை பார்க்க வேண்டும் போல் உள்ளது.

அங்கு அனுப்பிய சிறப்பு விமானம் காரணமாக நாங்கள் தற்போது ஒன்றாக இருக்கிறோம். இந்த கோவிட்-19 சமயத்தில் வேறு கண்டத்திற்கு சென்று வந்தது ஒன்றை மட்டும் உணர்த்துகிறது. சேர்ந்திருப்பதை நாம் எப்போதும் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: