இருமடங்கானது ட்விட்டரின் எழுத்து வரம்பு... பயனர்களின் பயன்பாட்டு முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

ட்விட்டர்

பட மூலாதாரம், Reuters

ட்வீட்டுகளில் பயன்படுத்தப்படும் எழுத்துக்களின் எண்ணிக்கையை தனது பெரும்பான்மையான பயன்பாட்டாளர்களுக்கு 140 லிருந்து 280 ஆக மாற்றுவதற்கான திட்டத்தை ட்விட்டர் நிறுவனம் தொடங்கியுள்ளது.

சில வார்த்தைகளிலேயே அதிக அர்த்தத்தை அளிக்கவல்ல ஜப்பானிய மற்றும் கொரிய மொழிகளுக்கு இந்த புதிய வரம்பு பொருந்தாது என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

140 எழுத்துக்கள் கருத்தை வெளிப்படுத்த போதுமானதாக இல்லையென்று எழுந்த விமர்சனத்தை அடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு 280 எழுத்துக்களாக வரம்பை அதிகரித்து சோதனை நடத்தியது ட்விட்டர் நிறுவனம்.

புதிய பயனாளர்களை ஈர்க்கவும் மற்றும் வளர்ச்சியை அதிகப்படுத்தவும் நினைக்கும் ட்விட்டரின் நடவடிக்கைளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

பயனர்களின் பயன்பாட்டு முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட சோதனையின்போது செய்யப்பட்ட ட்விட்டுகளில் வெறும் 5% தான் 140 எழுத்துக்கள் என்ற வரம்பையும் மற்றும் 2% மட்டுமே 190 எழுத்துக்களை கடந்ததாகவும் ட்விட்டர் நிறுவனம் தனது வலைப்பூ பதிவொன்றில் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், யார் அதிகளவிலான எழுத்துக்களை கொண்ட ட்விட்டுகளை செய்தார்களோ அவர்கள் அதிக பின்தொடர்பாளர்களையும், ஈடுபாட்டையும் மற்றும் தளத்தில் அதிக நேரத்தையும் செலவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

"இம்முறை புதியதாகவும் மற்றும் நூதனமாகவும் இருந்ததால் சோதனையின் முதல் சில நாட்களுக்கு அதிக எண்ணிக்கையிலான பயன்பாட்டாளர்கள் அதிகபட்ச வரம்பான 280 எழுத்துக்களை பயன்படுத்தியதாகவும், ஆனால் அடுத்த சில நாட்களில் அது சாதாரண நிலையை அடைந்ததாகவும் ட்விட்டரின் தயாரிப்பு பிரிவு மேலாளரான அலிசா ரோசன் தெரிவித்துள்ளார்.

காணொளிக் குறிப்பு, இந்தியாவில் அதிகபட்ச உயிரிழப்பை ஏற்படுத்தும் மின்னலின் வடிவத்திற்கான காரணமென்ன? (காணொளி)

"பயன்பாட்டாளர்கள் 140 எழுத்துக்களுக்கு மேல் பயன்படுத்தியபோது, அவர்கள் எளிதாகவும், அடிக்கடியும் பதிவிட்டனர். ஆனால், முக்கியமாக பெரும்பாலான நேரங்களில் பயன்பாட்டாளர்கள் 140 எழுத்துக்களுக்கு குறைவாகவே பதிவிட்டதால், ட்விட்டரின் தனித்துவம் தொடர்கிறது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஆங்கிலத்தில் செய்யப்பட்ட 9% ட்விட்டுகள் எழுத்து வரம்பை மீறியதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.

"நாங்களும், உங்களில் பலரும், ட்விட்டரின் கணக்குகள் 280 எழுத்துக்களால் செய்யப்பட்ட ட்விட்டுகளால் நிரம்பி வழியும் என்றும் புதிய வரம்புகளை பெற்ற பயனாளர்கள் எப்போதுமே அதிகபட்ச வரம்பை பயன்படுத்துவார்கள் என்றும் நினைத்தோம். ஆனால், எதுவுமே நடக்கவில்லை."

சமூக வலைத்தளமான ட்விட்டரை தற்போது 330 மில்லியன் பேரும், அதன் போட்டியாளர்களாக ஃபேஸ்புக்கை இரண்டு பில்லியன் பேரும் மற்றும் இன்ஸ்டாகிராமை 800 மில்லியன் பேரும் பயன்படுத்துகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :