மோதிரம் எந்த பெட்டியில் உள்ளது கண்டுபிடிக்க முடியுமா? புதிர் - 25
உங்கள் மூளையை தயார்படுத்தி, இந்த புதிரைக் கண்டுபிடியுங்கள்.நீங்கள் அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்!
வாழ்த்துகள்!

மூளைக்கு வேலை கொடுக்கும் பிபிசியின் புதிர் தொடரின் 25-ஆம் பகுதி இது.
புதிர் -25
ஒரு காலத்தில் ராணி ஒருவர் இருந்தார். அவரை திருமணம் செய்ய அவர் போடும் புதிரை கண்டுபிடிக்க வேண்டும்.
எனவே மூன்று விதமான பெட்டிகளில் குறிப்புகளை எழுதி வைத்து அதில் ஒன்றில் மோதிரம் ஒன்றை மறைத்து வைத்தார்.
அந்த பெட்டிகளில் குறிப்பிட்ட வார்த்தைகளையும் எழுதியிருந்தார்:
தங்க நிற பெட்டி: மோதிரம் இந்த பெட்டியில்தான் உள்ளது.
வெள்ளி நிற பெட்டி: மோதிரம் இந்த பெட்டியில் இல்லை.
வெண்கல நிற பெட்டி: மோதிரம் தங்க நிற பெட்டியில் இல்லை.
ராணியை திருமணம் செய்துகொள்ள மோதிரம் உள்ள பெட்டியை கண்டுபிடிக்க வேண்டும்.

விடை:
மோதிரம் வெள்ளி நிற பெட்டியில் உள்ளது.
மோதிரம் தங்கநிற பெட்டியில் உள்ளது என எழுதியிருந்தது உண்மையானால் வெள்ளி நிற பெட்டியில் எழுதி வைத்ததும் உண்மையாகும் ஆனால் ஏதேனும் ஒரே பெட்டியில் எழுதிப்பட்டதுதான் உண்மையாக இருக்க முடியும்.
வெள்ளிநிற பெட்டியில் எழுதப்பட்டிருந்தது உண்மை எனில் பிற இரண்டு பெட்டிகளில் ஒன்றும் உண்மையாக இருக்கக் கூடும் எனவே அதுவும் தவறு.
எனவே வெண்கல நிற பெட்டியில் எழுதியுள்ளதுதான் சரி;
மோதிரம் வெள்ளி நிற பெட்டியில் உள்ளது.
இந்த புதிர் பிரைண்டென்.காம் ஆல் உருவாக்கப்பட்டது.
முந்தைய புதிர்கள்:
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :













