கரடியின் நிறம் என்ன? புதிரை கண்டுபிடியுங்கள்!
உங்கள் மூளையை தயார்படுத்தி, இந்த புதிரைக் கண்டுபிடியுங்கள்.நீங்கள் அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்!
வாழ்த்துகள்!

பட மூலாதாரம், Getty Images
மூளைக்கு வேலை கொடுக்கும் பிபிசியின் புதிர் தொடரின் ஆறாம் பகுதி இது.
புதிர் - 6
நீங்கள் பயணம் செய்ய தொடங்குகின்றீர்கள், முதலில் 5 கிமீ தெற்கில், 5 கிமீ மேற்கில், 5 கிமீ வடக்கில் பயணம் செய்த பிறகு நீங்கள் எங்கே தொடங்கினீர்களோ அங்கே நிற்கின்றீர்.
உங்கள் பயணத்தில் நீங்கள் ஒரு கரடியை பார்க்க நேரிடுகிறது. அது என்ன நிறம் என்று கண்டுபிடியுங்கள்?

விடை:
வெள்ளை.
பூமியில் நீங்கள் 5 கிமீ தெற்கில், 5 கிமீ மேற்கில், 5கிமீ வடக்கில் பயணம் செய்தபிறகு எங்கே தொடங்குனீர்களோ அங்கே வந்தால் அது வட துருவம் என்று அர்த்தம்.
வட துருவத்தில் உள்ள ஒரே கரடி துருவக் கரடி. எனவே அது வெள்ளையாகதான் இருக்கும்.
இந்த புதிர், ஸ்பெக்டரம் சீக்ரெட் முகமை நுழைவு தேர்விலிருந்து எடுக்கப்பட்டது.
முந்தைய புதிர்கள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :













