காலி டாங்கை நிரப்ப எத்தனை நிமிடங்கள் தேவை? புதிர் - 21
உங்கள் மூளையை தயார்படுத்தி, இந்த புதிரைக் கண்டுபிடியுங்கள்.நீங்கள் அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்!
வாழ்த்துக்கள்!

பட மூலாதாரம், Getty Images
மூளைக்கு வேலை கொடுக்கும் பிபிசியின் புதிர் தொடரின் 21-ஆம் பகுதி இது.
புதிர் -21
ஒரு பெரிய டாங்கில் நிலையான விகிதத்தில் நீரை நிரப்பக் கூடிய, 'ஏ' மற்றும் 'பி' என்ற இரண்டு தண்ணீர் பைப்புகள் உள்ளன. அதில் 'ஏ' என்ற பைப் காலி டாங் ஒன்றை ஒரு மணி நேரம் 20 நிமிடங்களில் நிரப்பும் திறன் கொண்டது.
'பி' என்ற பைப், காலி டாங் ஒன்றை இரண்டு மணி நேரத்தில் நிரப்பக்கூடிய திறன் கொண்டது.
எனவே இந்த இரண்டு பைப்புகளும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால் ஒரு காலி டாங்கை நிரப்ப எத்தனை மணி நேரங்கள் தேவைப்படும்?

விடை:
பைப் `ஏ` 4/3 மணி நேரத்தை எடுத்துக் கொள்கிறது என்றால் அது ஒரு மணி நேரத்தில் 3/4 என்ற விகிதத்தில் டாங்கை நிரப்புகிறது.
பைப் `பி` டாங்கை நிரப்ப 2 மணி நேரங்கள் எடுத்துக் கொள்வதால் அது 1/2 என்ற விகிதத்தில் டாங்கை நிரப்புகிறது.
எனவே இரண்டு பைப்புகளும் ஒரே நேரத்தில் திறந்துவிடப்பட்டால் அதன் விகிதம் ஒரு மணி நேரத்திற்கு 3/4 + 1/2 = (3+2)/4 = 5/4 ஆக இருக்கும்.
எனவே இரண்டு டாங்குகளும் திறந்திருந்தால் அது ஒரு மணி நேரத்தில் 4/5 அல்லது 48 நிமிடங்களில் நிரம்பிவிடும்.
இந்த புதிர், ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது.
முந்தைய புதிர்கள்:
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :













