மொத்தம் எத்தனை நாற்காலிகள்? புதிர் - 22
உங்கள் மூளையை தயார்படுத்தி, இந்த புதிரைக் கண்டுபிடியுங்கள்.நீங்கள் அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்!
வாழ்த்துகள்!

பட மூலாதாரம், Getty Images
மூளைக்கு வேலை கொடுக்கும் பிபிசியின் புதிர் தொடரின் 22-ஆம் பகுதி இது.
புதிர் -22
உணவகம் ஒன்றில் இருக்கும் மேசைக்கு மூன்று கால்கள் உள்ளன, அங்கு இருக்கும் நாற்காலிகளுக்கு நான்கு கால்கள் உள்ளன. மேலும் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும், ஊழியர்கள் மூன்று பேருக்கும் இரண்டு கால்கள் உள்ளன.
ஒவ்வொரு மேசையிலும் நான்கு நாற்காலிகள் உள்ளன. ஒரு கட்டத்தில் நான்கில் மூன்று பங்கு நாற்காலிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அச்சமயத்தில் உணவத்தில் மொத்தம் 206 கால்கள் உள்ளன.
எனவே அந்த உணவகத்தில் மொத்தம் எத்தனை நாற்காலிகள் உள்ளன என்பதை கண்டறியுங்கள்.

விடை :
அங்கு மொத்தம் 32 நாற்காலிகள் இருக்கும். இதற்கான விடையை நீங்கள் வேறு முறையிலும் கண்டுபிடித்திருக்கலாம் அதில் இதுவும் ஒரு முறை.
206 கால்களில் ஊழியார்களின் ஆறு கால்களை கழித்தால் மொத்தம் 200 கால்கள்.
சராசரியாக ஒவ்வொரு மேசையிலும் மூன்று கால்கள் உள்ளன, 16 நாற்காலியின் கால்கள் மற்றும் ஆறு வாடிக்கையாளர்களின் கால்கள் என ஒரு மேசைக்கு மொத்தம் 25 கால்கள் என வைத்துக் கொள்ளலாம்.
200-ஐ 25ஆல் வகுத்தால் விடை 8; எனவே எட்டு மேசைகள் உள்ளன. ஒவ்வொரு மேசைக்கும் நான்கு நாற்காலிகள் என வைத்து கொண்டால் மொத்தம் 32 நாற்காலிகள்.
இந்த புதிர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது.
முந்தைய புதிர்கள்:
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :













