ஆஃப்கானிஸ்தான்: இருவேறு தாக்குதகளில் குறைந்தது 60 பேர் பலி

ராணுவ வீரர்

பட மூலாதாரம், Getty Images

ஆஃப்கானிஸ்தானில் உள்ள இருவேறு ஷியா மசூதிகளில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதகளில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் காபூலில் உள்ள இமாம் ஜமான் மசூதியில் நுழைந்த ஒரு துப்பாக்கிதாரி சுடுவதற்கு முன்பு வெடிகுண்டை வெடிக்க செய்ததில் தொழுகை செய்து கொண்டிருந்த 39க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

ஆஃப்கானிஸ்தானின் கஹோர் பிராந்தியத்தில் நடத்த மற்றொரு தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அந்நாட்டில் குண்டு வெடிப்பு மற்றும் தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 176 என்று கணக்கிடப்பட்டுள்ளது.

காணொளிக் குறிப்பு, மொசூலில் அல்-நூரி மசூதி தகர்க்கப்பட்ட பிபிசியின் பிரத்யேக காணொளி

இதுவரை எந்தவொரு குழுவும் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை என்றாலும், ஆஃப்கானிஸ்தான் முழுவதும் உள்ள ஷியா மசூதிகளை ஐஎஸ் அமைப்பு இலக்கு வைத்திருந்தது.

காபூலில் உள்ள ஷியா மசூதியில் நடந்த சம்பவத்தை உறுதி செய்த காபூல் காவல்துறையின் செய்தித்தொடர்பாளர் பசீர் மோஜஹித், தாக்குதல் குறித்த மேலதிக தகவல்கள் எதையும் அளிக்கவில்லை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :