உங்களுக்கு கருப்பு தொப்பியா? வெள்ளை தொப்பியா?! புதிர் - 14
உங்கள் மூளையை தயார்படுத்தி, இந்த புதிரைக் கண்டுபிடியுங்கள்.நீங்கள் அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்!
வாழ்த்துக்கள்!

மூளைக்கு வேலை கொடுக்கும் பிபிசியின் புதிர் தொடரின் 14-ஆம் பகுதி இது.
புதிர் -14
நீங்கள் ரமேஷ் மற்றும் கார்த்திக்குடன் சிறையில் உள்ளீர்கள். நீங்கள் மூவரும் எதிரே பார்த்தவாறு ஒரு வரிசையில் நிற்கிறீர்கள். வரிசையில் முதலாவதாக நீங்கள், அடுத்ததாக ரமேஷ் மற்றும் கடைசியாக கார்த்திக் நிற்கிறார்.
காவலாளி ஒருவர் மூன்று கருப்பு தொப்பிகளையும், இரண்டு வெள்ளை தொப்பிகளையும் வைத்துள்ளார். தோராயமாக, ஒவ்வொருவர் தலையிலும் ஒரு தொப்பியை வைக்கிறார்.
கார்த்திக்கால் இரண்டு பேரின் தலையில் வைத்த தொப்பியையும் பார்க்க முடியும். ரமேஷால் உங்கள் தொப்பியை பார்க்க முடியும். ஆனால் உங்களால் யாருடைய தொப்பியையும் பார்க்க முடியாது.
தங்களது தலையில் இருக்கும் தொப்பியின் நிறத்தை யாரும் பார்க்க இயலாது.
யாராவது உங்கள் தலையில் இருக்கும் தொப்பியின் நிறத்தை 100 சதவீதம் சரியாக கூறிவிட்டால், அனைவரையும் விடுவிப்பதாக காவலாளி தெரிவிக்கிறார்.
கார்த்திக்கிடம் முதலில் பதில் கேட்கப்படுகிறது, கார்த்திக் மிகவும் நேர்மையான மற்றும் புத்திசாலி மனிதர். ஆனால் 100 சதவீதம் உறுதியாக சொல்வதற்கு வழியே இல்லை என்று அவர் தெரிவித்துவிட்டார்.
பிறகு அந்த காவலாளி ரமேஷிடம் கேட்கிறார். ரமேஷும் புத்திசாலி மனிதர். ஆனால் அவராலும் சரியான பதிலை சொல்ல முடியவில்லை.
கடைசியாக உங்களிடம் கேள்வி கேட்கப்படுகிறது. நீங்கள் 100 சதவீதம் சரியாக சொல்லிவிடுகிறீர்கள். காவலாளி உங்கள் அனைவரையும் விடுவித்துவிடுகிறார்.
நீங்கள் அணிந்துள்ள தொப்பியின் நிறம் என்ன, அது உங்களுக்கு எப்படி தெரிந்தது?

விடை:
நீங்கள் கருப்பு தொப்பி அணிந்துள்ளீர்.
இதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டுமானால் பிறரால் என்ன பார்க்க முடியாதோ அதை நீங்கள் யோசிக்க வேண்டும்.
கார்த்திக்கால் இரண்டு வெள்ளை தொப்பிகளை பார்க்க முடியாமல் இருந்திருக்கலாம் இல்லையேல் அவருடைய தொப்பி கருப்பு என்று அவருக்கு தெரிந்திருக்கலாம். கார்த்திக் ஒரு வெள்ளை தொப்பி மற்றும் ஒரு கருப்பு தொப்பியும் அல்லது இரண்டு கருப்பு தொப்பியையும் பார்த்திருக்கலாம். எனவே அவரால் அவர் என்ன நிறத்தில் தொப்பி அணிந்துள்ளார் என்பதை சொல்ல இயலவில்லை.
கார்த்திக்கின் பதிலை கேட்டும், அவர் இரண்டு வெள்ளை நிற தொப்பியை பார்த்திருக்க இயலாது என்பது தெரிந்தவுடனும், ரமேஷ் தனக்கு முன் வெள்ளை தொப்பியை கண்டிருந்தால் அவர் கருப்பு நிறத்தில் தொப்பி அணிந்துள்ளார் என்று அர்த்தம். ஆனால் ரமேஷிற்கும் உறுதியாக தெரியவில்லை. எனவே நீங்கள் கருப்பு தொப்பியை அணிந்துள்ளீர்.
இந்த புதிர் ஃபிட் ப்ரைன்ஸிலிருந்து எடுக்கப்பட்டது.
முந்தைய புதிர்கள்:
- படகு எத்தனை முறை நதியை கடக்க வேண்டும்? புதிரை கண்டுபிடியுங்கள்!
- பேருந்து எந்த திசையை நோக்கி பயணிக்கிறது?! புதிர் - 11
- கேக்கை தின்றவர் யார்? புதிரை கண்டுபிடித்து ராணிக்கு உதவுங்கள்
- பொய் சொல்பவர் யார்? புதிரை கண்டுபிடியுங்கள்!
- போலி தங்கக்கட்டி எது? புதிரை கண்டுபிடியுங்கள்!
- கரடியின் நிறம் என்ன? புதிரை கண்டுபிடியுங்கள்!
- பால்காரருக்கு உதவ முடியுமா? புதிரை கண்டுபிடியுங்கள்!
- ஆறாவது நாடு என்னவாக இருக்கும்? புதிரைக் கண்டுபிடியுங்கள்!
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :













