இந்த வார உலக நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு

இந்த வாரம் (ஆகஸ்ட் 19 - 26) உலக நாடுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் சிறந்த புகைப்படங்களின் தொகுப்பு.

ஒரு இளம் காளை பழு தூக்கி மூலம் கீழே இறக்கப்படுகிறது

பட மூலாதாரம், RIZWAN TABASSUM/ Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தானில் உள்ள கராச்சியில், கன்றாக இருந்தபோது முதல் ஒரு நான்கு அடுக்கு மாடிக்கு கட்டடத்தின் மேல்தளத்தில் வளர்க்கப்பட்ட ஒரு இளம் காளை பழு தூக்கி மூலம் கீழே இறக்கப்படுகிறது. தியாகத் திருநாளன்று வெட்டப்படுவதற்கு அது தயார் செய்யப்படுகிறது.
இனவெறி எதிர்ப்பாளர்கள்

பட மூலாதாரம், Stephanie Keith/ Reuters

படக்குறிப்பு, அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் 'பேச்சுரிமை' பொதுக்கூட்டம் நடத்த முயன்ற வலதுசாரிப் பேச்சாளர்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான இனவெறி எதிர்ப்பாளர்கள் திரண்டனர். கடந்த வாரம், சார்லட்ஸ்வில் நகரில் நடந்த போராட்டங்களுக்குப் பிறகு, அமெரிக்காவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
நினைவேந்தல் கூட்டம்

பட மூலாதாரம், Susana Vera/ Reuters

படக்குறிப்பு, வேன் மோதி நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் இறந்த மற்றும் பலர் காயமடைந்த பார்லோசினாவின் லாஸ் ராம்பிளாசில் முன்கூட்டியே திட்டமிடப்படாத ஒரு உடனடி நினைவேந்தல் கூட்டம் நடந்தது.
டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா

பட மூலாதாரம், DAVID MOIR/ EPA

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா வெள்ளை மாளிகை மாடியில் இருந்து சூரிய கிரகணத்தைப் பார்த்தனர்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஓபெரா ஹவுஸ் முன்பு நடனமாடும் டிமிட்ரி சாஸ்டாகோவிச் இயற்றிய 'தி நோஸ்' என்னும் இசை நாடகத்தின் நடிகர்கள்.

பட மூலாதாரம், DAVID MOIR/ EPA

படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஓபெரா ஹவுஸ் முன்பு நடனமாடும் டிமிட்ரி சாஸ்டாகோவிச் இயற்றிய 'தி நோஸ்' என்னும் இசை நாடகத்தின் நடிகர்கள்.
அயர்லாந்து வீரர் பெட்ராம் ஆலன் தன் குதிரை மீது இருந்து கீழே தவறி விழுந்தார்.

பட மூலாதாரம், Pontus Lundahl/TT News Agency

படக்குறிப்பு, சுவீடனில் நடைபெற்ற குதிரைகள் மீது அமர்ந்து தடைகளைத் தாண்டும் போட்டிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் அயர்லாந்து வீரர் பெட்ராம் ஆலன் தன் குதிரை மீது இருந்து கீழே தவறி விழுந்தார்.
கிரிக்கெட் போட்டி

பட மூலாதாரம், Hannah McKay/ Reuters

படக்குறிப்பு, இங்கிலாந்து அருகே உள்ள சால்வெண்ட் நீரிணை மீது அமைந்துள்ள ப்ராம்பில்ஸ் மணல் திட்டு. ராயல் சதர்ன் யாட்ச் கிளப் மற்றும் ஐலேண்ட் செய்லிங் கிளப் ஆகியே அணிகளுக்கு இடையே ஆண்டுதோறும் அங்கு நிகழும் கிரிக்கெட் போட்டி.
கடற்பாசிப் படகுப்போட்டி

பட மூலாதாரம், Clodagh Kilcoyne/ Reuters

படக்குறிப்பு, அயர்லாந்தில் உள்ள கின்ராவா எனும் இடத்தில் நடைபெற்ற கடற்பாசிப் படகுப்போட்டியில் இலக்கை நெருங்கும் போட்டியாளர்கள். க்ளிமின் எனப்படும் கடற்பாசியின் கற்றைகள் டன் கணக்கில் கடலில் இருந்து கரைக்கு எடுத்து வரப்பட்டு படகுகள் செய்யப்படும்.
தனது துப்பாக்கியால் குறி பார்க்கும் சிரிய ஜனநாயகப் படையின் ராணுவ வீரர்.

பட மூலாதாரம், Zohra Bensemra/ Reuters

படக்குறிப்பு, சிரியாவில் உள்ள ரக்கா பழைய நகரில் இஸ்லாமிய அரசு என்று அழைக்கப்படும் அமைப்பினருடன் சண்டையிடும்போது, தனது துப்பாக்கியால் குறி பார்க்கும் சிரியாஜனநாயகப் படையினர்.
தன் நாவில் கற்பூரத்தை ஏந்தியுள்ள 'நிஹாங்' என்று அழைக்கப்படும் சீக்கிய மத வீரர்.

பட மூலாதாரம், NARINDER NANU/ Getty Images

படக்குறிப்பு, சீக்கிய மத நூலான குரு கிராந்த் சாஹிப் இயற்றப்பட்டு 413 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸில் நடந்த ஊர்வலத்தின்போது தன் நாவில் கற்பூரத்தை ஏந்தியுள்ள 'நிஹாங்' என்று அழைக்கப்படும் சீக்கிய மத வீரர்.

அனைத்துப் படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :