கொலம்பியாவில் படகு மூழ்கி 6 பேர் பலி, 16 பேர் மாயம்

பட மூலாதாரம், AFP/Getty Images
கொலம்பியாவின் வட மேற்கிலுள்ள நீர்தேக்கத்தில் படகு கவிழ்ந்ததால் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரபலமான குவாடேப் ரிசார்ட் நகருக்கு அருகிலுள்ள அல்மிராந்தே என்ற 4 மாடி படகு மூழ்கிய விபத்தில், 133 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 16 பேரை இன்னும் காணவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பட மூலாதாரம், AFP/Getty Images
படகில் 170 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த படகு 5 நிமிடங்களுக்குள் நீரில் மூழ்கி விட்டதாக இதனை நேரில் பார்த்தவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், AFP/Getty Images
ஞாயிற்றுக்கிழமை மாலை சம்பவ இடத்தை பார்வையிட்ட கொலம்பிய அதிபர் யுவான் மானுவெல் சாண்டோஸ், 6 பேர் அந்த சம்பவத்தில் இறந்துள்ளதாக தெரிவித்தார். முன்னதாக, அதிகாரிகள் 9 பேர் பலியாகியதாக தெரிவித்திருந்தனர்.

பட மூலாதாரம், AFP/Getty Images
20க்கு அதிகமானோர் குவாடேப்பிலுள்ள மருத்துமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

தொடர்படைய தலைப்புகள்
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












