கொலம்பியா அமைதி ஒப்பந்தம்: மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்படுமா?

கொலம்பிய அரசு மற்றும் ஃபார்க் கெரில்லா இயக்கத்திற்கு இடையே கையெழுத்தான அமைதி ஒப்பந்தத்தை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பது குறித்த கருத்தறியும் வாக்கெடுப்பில் கொலம்பிய மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

அதிபர் யுவான் மானுவேல் சாண்டோஸ் மற்றும் டிமோசென்கோ ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதிபர் யுவான் மானுவேல் சாண்டோஸ் மற்றும் டிமோசென்கோ ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது

மத்திய வலதுசாரி அதிபர் யுவான் மானுவேல் சாண்டோஸ், மற்றும் ஐம்பது வருட காலம் நடந்த போரில் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரிய டிமோசென்கோ என்றழைக்கப்படும் ஃபார்க் குழுவின் தலைவர் ஆகியோர் திங்களன்று அந்த அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அந்த சமாதான ஒப்பந்தத்தின் கீழ், ஃபார்க் இயக்கம் தனது ஆயுதங்களை ஒப்படைக்கின்றது, போதை பொருள் வணிகத்தில் ஈடுபடுவதை நிறுத்துகிறது, மேலும் ஃபார்க் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றியமைக்க உள்ளது.

இருந்தரப்பிலும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்நாட்டு போரால் 2 லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர் மேலும் 6 மில்லியனுக்கும் மேலான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

கொலம்பிய மக்களில் பலர் அமைதியை வரவேற்கின்றனர் ஆனால், சிலர் ஃபார்க் அமைப்பிற்கு அதிகப்படியான சலுகைகள் வழங்கப்படுவதாக கருதுகின்றனர்.