“சலவை எந்திரம்” போன்று குலுங்கிய ஏர் ஏசியா விமானம்

காணொளிக் குறிப்பு, “சலவை எந்திரம்” போன்று குலுங்கிய ஏர் ஏசியா விமானம்

பறந்து கொண்டிருந்த ஏர்ஏசியா எக்ஸ் பயணியர் விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட பிறகு, "சலவை எந்திரம்" குலுங்குவதுபோல பறந்ததை பயணி ஒருவர் காணொளி பதிவு செய்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு பெர்த்தில் இருந்து மலேசியாவுக்கு கிளம்பிய விமானம் டி7237, மீண்டும் பெர்த்துக்கு திரும்பி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த விமானம் தண்ணீரில் தரையிறக்கப்படும் சாத்தியக்கூறு நிலவியதால் , பெர்த்தின் வடக்கில் அவசர சேவைகள் தயாராக நிறுத்தப்பட்டதாக நதி மற்றும் நீர்நிலை படையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

ஏர்எசியா எக்ஸ் இது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், இந்த விமானம் "திடீர் எந்திர கோளாறு" ஏற்பட்டதாக பல பயணியர் ஏபிசி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்