கொலம்பியா அரசுக்கும், ஃபார்க் போராளிகளுக்கும் இடையே இணக்கப்பாடு

52 வருடங்களாக நடந்து வந்த உள்நாட்டு மோதலை முடிவுக்கு கொண்டு வர, ஒரு வரலாற்று புகழ் பெற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிலையை தாங்கள் எட்டி விட்டதாக கொலம்பியா நாட்டு அரசும், ஃபார்க் போராளிகளும் அறிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், AFP

இவர்கள் இருவரும் கூட்டாக வெளியிட்ட ஒரு அறிக்கையில், வியாழக்கிழமையன்று ஹவானாவில் ஃபார்க் குழுவின் தலைவர் டிமோலியோன் ஜிம்மேனேஸுடன், கொலம்பிய அதிபர் யுவான் மானுவெல் சாண்டோஸ் சந்திப்பு நடத்தவுள்ளதாகவும், அப்போது ஒப்பந்தத்தின் விவரங்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தனர்.

இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட போதிலும், சமாதான உடன்படிக்கை எவ்வாறு ஒப்புதல் அளிக்கப்படும் மற்றும் செயல்படுத்தபடும் என்பதில் இரு தரப்புக்கும் கருத்து வேறுபாடு தற்போதும் நிலவி வருகிறது.

கியூபா தலைநகரில் நடக்கும் விழாவில் கொலம்பிய அதிபர் யுவான் மானுவெல் சாண்டோஸ், ஃபார்க் குழுவின் தலைவர் டிமோலியோன் மற்றும் ஐநா செயலாளர் பான் கீ மூன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்