ட்விட்டர் நிறுவனத்திடம் பணிந்தது அமெரிக்க அரசு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக சமூக வலைத்தளமான ட்விட்டரில் கணக்கு தொடங்கியவரின் அடையாளத்தை அந்நிறுவனத்திடமிருந்து அமெரிக்க அரசாங்கம் கேட்டிருந்த நிலையில், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை ட்விட்டர் நிறுவனம் அணுகிய அதற்கு மறுநாள் தனது கோரிக்கையை அமெரிக்கா கைவிட்டுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்திடம் அடிப்பணிந்த அமெரிக்க அரசு

பட மூலாதாரம், AFP

@ALT_USCIS என்ற ட்விட்டர் கணக்கு அதிபர் டிரம்பின் குடியேற்ற கொள்ளைகளை விமர்சித்து பதிவிடப்பட்டிருந்தது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவையில் பணியாற்றும் ஊழியர்களால் இந்த கணக்கு நடத்தப்படுவதாக கூறப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அந்த ட்விட்டரில் முகவரியில் இயங்குபவர்களின் அடையாள தகவலை கேட்டு அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் ஆணை ஒன்றை வழங்கியிருந்தனர்.

ஆனால், ட்விட்டர் நிறுவனம் இதுதொடர்பாக தொடர்ந்து வழக்கை அடுத்து அரசாங்கத்தின் கோரிக்கை கைவிடப்பட்டுள்ளதாக ட்விட்டர் கூறியுள்ளது.

ட்விட்டர் நிறுவனம் பதிந்த ஒற்றை நாள் ஆயுட்காலம் கொண்ட வழக்கை தொடர்ந்து @ALT_USCIS என்ற ட்விட்டர் கணக்கை பின் தொடர்ந்தவர்களின் எண்ணிக்கை 38,000 லிருந்து 1,58,000 ஆக வேகமாக வளர்ந்தது.

அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு நிறுவனம் ட்விட்டருக்கு வழங்கிய ஆணையின்படி, ''@ALT_USCIS என்ற ட்விட்டர் கணக்கின் பயன்பாட்டாளர் பெயர், கணக்கை இயக்கும் ஐ.டி, தொலைபேசி எண்கள், மெயில் முகவரிகள் மற்றும் கணினியின் ஐ.பி முகவரி உள்பட அனைத்துத் தகவல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது.

ட்விட்டர் நிறுவனத்திடம் அடிப்பணிந்த அமெரிக்க அரசு

பட மூலாதாரம், TWITTER / ALT_USCIS

ஆனால், இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் குறித்து பொதுவாக பதிவுகள் பெற உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களம் பயன்படுத்தும் விதிகளை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாதம் 13 ஆம் தேதிக்குள் இந்த தகவல்களை அளிக்க வேண்டும் என்று இந்த ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமெரிக்க அரசின் நடவடிக்கையை எதிர்த்து ட்விட்டர் நிறுவனம் சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள நீதிமன்றத்தை அணுகியது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவையின் நடவடிக்கைகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் விசாரணை முறையை முறைகேடாக பயன்படுத்துவதாகவும், பேச்சு சுதந்தரத்தின் குரல் வலையை நெரிப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தது.

ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை அணுகிய தகவல் பொதுவெளியில் வெளியானதை தொடர்ந்து, அதற்கு மறுநாள் அமெரிக்க அரசு தனது கோரிக்கை திரும்ப்ப் பெற்றது.

அமெரிக்க அரசாங்கத்திடம் எந்த தகவலையும் ட்விட்டர் வழங்கவில்லை. விசாரணை முடிந்துவிட்டதாக நீதித்துறையை சேர்ந்த நீதிபதி ஏ எஃப் பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

மாற்று எதிர்ப்பு

ஜனவரி மாதத்தில், டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்ற போது, அமெரிக்க அரசாங்கத்தின் சேவைகளின் மாற்றுக் கணக்குகள் அதிகளவில் உருவாகத் தொடங்கின.

இந்த மாற்று கணக்கின் ட்விட்டர் டிஸ்பிலே படம் அதிகாரப்பூர்வ USCIS லோகோவை கொண்டுள்ளது.

பட மூலாதாரம், TWITTER

படக்குறிப்பு, இந்த மாற்று கணக்கின் ட்விட்டர் டிஸ்பிலே படம் அதிகாரப்பூர்வ USCIS லோகோவை கொண்டுள்ளது.

இந்த மாற்றுக் கணக்குகள் முன்னாள் சேவை உறுப்பினர்களால் இயக்கப்படுவதாக பலர் கூறி வந்தனர்.

ட்விட்டரில் இதுபோன்ற மாற்றுக் கணக்கிலிருந்து இயங்கக்கூடியவர்கள் தங்கள் சுய அடையாளத்தை ரகசியம் காத்து அமெரிக்காவின் புதிய மற்றும் புதுமையான வர்க்கத்தை சேர்ந்த பேச்சாளர்கள் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்