பயணத் தடைக்கு புதிய ஆணை: டிரம்ப் திட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடக்கத்தில் கொண்டு வந்த நிர்வாக ஆணையை செயல்படுத்துவதற்கு நீதிமன்றங்களால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்கா வருகின்ற குடிமக்களை தடை செய்வதற்கு புதியதொரு நிர்வாக ஆணையை வெளியிடுவதை அவர் கவனத்தில் கொண்டிருப்பதாக தெரிய வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
திங்கள் அல்லது செவ்வாய்கிழமை, "புதிய நிர்வாக ஆணை" ஒன்று வெளியாகலாம் என்று விமானப்படை தளம் ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசியபோது, டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
சான் பிரான்சிஸ்கோவின் மேல் முறையீட்டு நீதிமன்றம் இடைநிறுத்தப்பட்ட தொடக்க நிர்வாக ஆணை மீது தீர்ப்பளித்த பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
டொனால்ட் டிரம்ப் விதித்த நிர்வாக ஆணை பெரும்பாலும் முஸ்லீம்கள் வாழும் 7 நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ள தடைவித்தது.
பதிய அமெரிக்க குடிவரவு ஆணை எத்தகைய நிபந்தனைகளை கொண்டிருக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை.
"சிறிதளவே" மாற்றம் இருக்கும் என்று கூறிய டிரம்ப், புதிய நிர்வாக ஆணை பற்றிய விவரங்கள் எதையும் வெளியிடவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












