அச்சுறுத்தல் பட்டியலில் டிரம்பின் புதிய நிர்வாகம்

ஐரோப்பிய ஒன்றியம் எதிர்கொள்ளும் வெளிப்புற அச்சுறுத்தல்களில் ஒன்றாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய நிர்வாகத்தையும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க் பட்டியலிட்டுள்ளார்.

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க்

பட மூலாதாரம், Reuters

ஐரோப்பிய தலைவர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சீனாவின் அதிகரித்துவரும் பிடிவாதப் போக்கு, அண்டை நாடுகளை ஆக்கிரமிக்கும் ரஷ்ய கொள்கை, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளவைகளோடு , டிரம்பின் புதிய நிர்வாகத்தையும் சேர்த்துள்ளார்.

அமெரிக்காவின் கடந்த 70 ஆண்டுகால வெளியுறவு கொள்கையை டிரம்ப் நிர்வாகத்தின் கவலையளிக்கும் பிரகடனங்கள் கேள்விக்கு உட்படுத்துவது போல் தோன்றுவதாக டஸ்க் குறிப்பிட்டுள்ளார்,

நேட்டோ பற்றி கேள்விகள் எழுப்பி சில ஐரோப்பிய தலைவர்களை டிரம்ப் எரிச்சலூட்டினார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நேட்டோ பற்றி கேள்விகள் எழுப்பி சில ஐரோப்பிய தலைவர்களை டிரம்ப் எரிச்சலூட்டினார்

ஐரோப்பிய ஒன்றியம் முதலில் நிறுவப்பட்ட பிறகு, இதனை விட மிக பெரிய சவால்களை எதிர்கொண்டு இருப்பதாக கூறியுள்ள டஸ்க், இந்த ஒன்றியம் ஒற்றுமையோடு செயல்பட அழைப்பு விடுத்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்