டிரம்ப் கொள்கை எதிர்ப்பாளர்களுக்கு ஐ.நாவுக்கான புதிய அமெரிக்க தூதர் எச்சரிக்கை விடுப்பு
ஐக்கிய நாடுகள் சபைக்கான புதிய அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டவர், நியு யார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் தன் முதல் நாள் உரையின் போது அதிபர் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுவோருக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
செய்தியாளர்களிடம் பேசிய தூதுவர் நிக்கி ஹலே, தன்னுடைய அணியானது அமெரிக்க கூட்டணி நாடுகளை ஆதரிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு அவர்கள் அதே ஆதரவை திருப்பி வழங்குவதை உறுதிப்படுத்துவோம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், எங்களுடைய ஆதரவு இல்லாத நாடுகளின் பெயர்களை நாங்கள் வெளியிட்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
டிரம்ப் நிர்வாகமானது ஐ.நா.வின் செயல்பாடுகளை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடும் என்று தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












