ஏமன் உள்நாட்டு போரினால் 70,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது
ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பமான இந்த உள்நாட்டு மோதலில், மேலும் 37 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஏமனில் பாதிக்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்கள் மூடப்பட்டிருப்பதாகவும் அல்லது வெறும் ஓரளவு செயல்பாட்டில் இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
உலகிலே மிகவும் ஏழை நாடாக கருதப்படும் ஏமனில் உள்நாட்டு போரானது கடுமையான பொருளாதார சீர்குலைவை கொண்டுவந்துள்ளது.
மேலும், பட்டினி காரணமாக பலர் பலியாகி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.








