இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஏலத்தில் டைட்டானிக் கப்பலில் பயன்படுத்தப்பட்ட சாவி

இங்கிலாந்தில் இன்று நடைபெற உள்ள ஏலத்தில், பேரழிவின் நினைவுச்சின்னங்களில் ஒன்றான டைட்டானிக் கப்பலில் உயிர் காக்கும் மிதவைகளின் அலமாரியை திறக்க கப்பல் பணியாளர் பயன்படுத்திய சாவி பங்கேற்க உள்ளது.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

இந்த ஏலத்தை நடத்துபவரான ஹென்ரி ஆல்ட்ரிஜ், 35 ஆயிரம் டாலர்களுக்கும் அதிகமாக இந்த சாவி ஏலம் போகும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுதவிர, டைட்டானிக் கப்பலின் கேப்டன், கேப்டன் எட்வர்ட் ஸ்மித்தின் வெளியிடப்படாத புகைப்படங்களும் விற்பனைக்கு உள்ளன.

ஏப்ரல் 1912 ஆம் ஆண்டு, வட அட்லான்டிக்கில் பனிப்பாறை மீது மோதியதில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்கள் கடலில் மூழ்கி பலியாயினர். அதில், கேப்டன் ஸ்மித்தும் ஒருவர்.