வட இந்தியாவில் தலித் ஒருவர் வெட்டிக்கொலை
இந்தியாவின் வட மாநிலமான உத்தர்காண்டில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Hirdesh kumar
கிராம மக்களுக்காக உள்ள மாவரைக்கும் மையத்தை அவர் பயன்படுத்தியற்காக அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
கொலை செய்யப்பட்டுள்ள சோஹன் ராம் அந்த மாவரைக்கும் மையத்தை பயன்படுத்தியதால் அதன் புனிதம் கெட்டுவிட்டது என உள்ளூர் ஆசிரியர் ஒருவர் குற்றஞ்சாட்டியதை அடுத்து அவர் தாக்கப்பட்டுள்ளார்.
அவர் எதிர்ப்பு தெரிவித்தபோது அந்த ஆசிரியர் சோஹன் ராமை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.
அந்த ஆசிரியர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் சாதிய அடிப்படையில் பாகுபாடு இருப்பது தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்தாலும் அங்கு பரந்துபட்ட அளவில் சாதிய மோதல்கள் நடைபெறுகின்றன.








