இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஒ விஷால் சிக்கா பதவி விலகல்

சி.இ.ஒ விஷால் சிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சி.இ.ஒ விஷால் சிக்கா

பிரபல இந்திய மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸின் தலைமை செயலதிகாரியும், நிர்வாக இயக்குநருமான விஷால் சிக்கா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக அந்நிறுவனம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் முதன்மை செயலாக்க அதிகாரி யு.பி பிரவீன் ராவ், தாற்காலிகமாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக செயல்படுவார்.

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் இன்ஃபோசிஸ் நிறுவனமும் ஒன்று.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக சிக்கா நியமிக்கப்பட்டார். அப்போது, தள்ளாட்டத்திலிருந்த தொழிலை மேம்படுத்தும் சவால் சிக்காவுக்கு ஒதுக்கப்பட்டது.

தற்போது, சிக்காவின் ராஜிநாமா அறிவிப்பைத் தொடர்ந்து, பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 7 சதவீதம் சரிந்துள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :