நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்

பட மூலாதாரம், Twitter
பிரபல நகைச்சுவை நடிகரான நெல்லை சிவா மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 69.
கொரோனா பெருந்தொற்று காரணமாக சமீப காலங்களில் தமிழ்த்திரையுலகில் பிரபலங்களின் இறப்பு செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நடிகர் விவேக், பாண்டு, இயக்குநர் கே.வி. ஆனந்த் என அடுத்தடுத்து பல பிரபலங்கள் கொரோனா தொற்றாலும், உடல்நலக்குறைவு காரணமாகவும் காலமாகினர். இந்த மரணங்கள் தந்த அதிர்ச்சியில் இருந்தே மீள முடியாத நிலையில், பிரபல நகைச்சுவை நடிகரான நெல்லை சிவா இன்று மாலை உடல்நலக்குறைவு ஏற்பட்டு மாரடைப்பால் அவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம், பனங்குடி வீட்டில் காலமாகியுள்ளார்.
இயக்குநர் பாண்டியராஜனின் 'ஆண்பாவம்' திரைப்படம் மூலமாக நடிகராக திரையுலகில் அறிமுகமான நெல்லை சிவா, தனது தனித்துவமான நெல்லை பாணி பேச்சு வழக்குக்கு திரையுலகில் புகழ் பெற்றவர்.
'வெற்றிக்கொடிகட்டு', 'திருப்பாச்சி', 'அன்பே சிவம்' உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களிலும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சிவாஜியின் தீவிர ரசிகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் வடிவேலுவுடன் இவர் நடித்த 'கிணத்த காணோம்' காமெடி காட்சி மிகவும் புகழ்பெற்றது. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான படம் 'பரமபதம் விளையாட்டு'. சினிமா படங்களில் மட்டுமல்லாது சீரியல்களிலும் கவனம் செலுத்தினார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் இவர் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது எதிர்பாராத மரணத்திற்கு திரையுல கலைஞர்களும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பிற செய்திகள் :
- திருப்பதியில் ஆக்சிஜன் இல்லாமல் இறந்த 11 கொரோனா நோயாளிகள்
- காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜெருசலேம் தாக்குதலுக்கு பதிலடி; அல்-அக்சா மசூதியில் வன்முறை
- இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை - கவலை தரும் தொற்று தரவுகள்
- கொரோனா நோயாளிகளை தாக்கும் மியூகோர்மைகோசிஸ்: தற்காப்பது எப்படி?
- பிகாரை தொடர்ந்து உ.பி காஸிபூர் நதிக்கரையிலும் ஒதுங்கிய சடலங்கள்
- கும்பமேளா திருவிழா கொரோனா சூப்பர் ஸ்பிரெட்டரா? பதற வைக்கும் களத்தகவல்
- 'இந்திய கொரோனா திரிபு சர்வதேச கவலைக்குரியது' - தடுப்பூசி, மருந்துகள் வேலை செய்யுமா?
- ரஷ்ய பள்ளி துப்பாக்கி சூட்டில் சிறுவர்கள், ஆசிரியர் பலி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












