ROWDY BABY: ஆளப்போறான் தமிழனை மிஞ்சிய 'ரௌடி பேபி' - யூட்யூபில் 10 கோடி பார்வைகள்

விஜய் மற்றும் சாய் பல்லவி

பட மூலாதாரம், Mersal/maari -2

தமிழ் சினிமாவில் வெளியான திரைப்பட பாடல் ஒன்று யூட்யூபில் முதல் முறையாக நூறு மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னதாக இந்திய அளவில் ஒய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் மிகப்பெரிய அளவில் வைரலாகி நூறு மில்லியன் பார்வைகளை கடந்தது. 3 என்ற திரைப்பட ஆல்பத்தின் பாடலான ஒய் திஸ் கொலைவெறி, தமிழ் மற்றும் ஆங்கில மொழியை கலந்து எழுதப்பட்ட பாடல் வரிகளை கொண்டிருந்தது.

யூட்யூபில் வெளியான அப்பாடல் பார்வையாளர்களை மிகப்பெரிய அளவில் ஈர்த்தாலும் அது நேரடியாக திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பாடல் வடிவமல்ல. அந்த வகையில் தமிழ் மொழியில் வெளியான மாரி -2 எனும் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பாடலொன்று யூட்யூபில் வெளியாகி 100 மில்லியன் பார்வைகளை தாண்டியிருக்கிறது

கடந்த ஜனவரி 2-ம் தேதி யூட்யூபில் வெளியான ரௌடி பேபி பாடல் ஜனவரி 20-ம் தேதியன்று 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. 21-ம் தேதி காலை நிலவரப்படி 105 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது யுவன்ஷங்கர்ராஜாவின் ரௌடி பேபி பாடல்.

முன்னதாக நடிகர் விஜய் நடித்து, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த மெர்சல் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் 90 மில்லியன் பார்வைகளை தாண்டியிருந்தது. தற்போது 'ரௌடி பேபி' பாடல் மெர்சல் திரைப்பட பாடலை விட கூடுதல் பார்வைகளை பெற்றுள்ளது.

யூட்யூபில் வெளியான தமிழ் சினிமா பாடல்களில் அதிக பார்வைகளை பெற்றுள்ள முதல் ஐந்து காணொளி பாடல்கள் எவை?

வாயாடி பெத்த புள்ள

பட மூலாதாரம், kanaa/sivakarthikeyan/sony music india

5. 'வாயாடி பெத்த புள்ள'

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி வெளியான வாயாடி பெத்த புள்ள எனும் திரைப்பாடல் இன்றைய (ஜனவரி 21-ம் தேதி) நிலவரப்படி 86 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் ராஜா காமராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ் இதில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

யூட்யூபில் அதிக பார்வைகளை ஈர்த்துள்ள 'வாயாடி பெத்த புள்ள' பாடல் கனா திரைப்படத்தின் இசை ஆல்பத்தைச் சேர்ந்தது. சோனி மியூசிக் இந்தியா எனும் சேனலில் வெளியான இப்பாடல், கனா திரைப்படத்தில் இடம்பெற்ற காணொளி வடிவ பாடல் அல்ல.

சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மகள் ஆகியோர் பாடும் இப்பாடலுக்கு இதுவரை 7.6 லட்சம் விருப்பங்கள், 35 ஆயிரத்துக்கும் அதிகமான கருத்துக்கள் கிடைத்துள்ளன.

சிவகார்த்திகேயன் மகளின் மழலை குரலை பலர் பாராட்டியுள்ளனர்.

திபு நினன் தாமஸ் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

குலேபா

பட மூலாதாரம், Gulebakavali/K.J.Rajesh

4. 'குலேபா'

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான குலேபா பாடல் இன்றைய நிலவரப்படி (ஜனவரி 21) 87 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

கல்யாண் இயக்கத்தில் விவேக்-மெர்வின் இசையமைத்த இப்பாடல் குலேபகாவலி எனும் திரைப்படத்தில் இடம்பெற்றது.

YouTube பதிவை கடந்து செல்ல, 2
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 2

நடிகரும் நடன இயக்குநருமான பிரபு தேவா இப்பாடலில் தனது நடன அசைவுகளால் பார்வையாளர்களை கட்டிப்போட்டார். இசையமைப்பாளரும் பாடகருமான அனிருத் 'குலபா' பாடலை மெர்வின் சாலமனுடன் இணைந்து பாடியுள்ளார்.

திங்க் மியூசிக் இந்தியா சேனலில் இடம்பெற்ற இப்பாடலுக்கு 3.8 லட்சம் விருப்பங்கள் மற்றும் 10 ஆயிரம் கருத்துகள் கிடைத்துள்ளன.

மெர்சல்

பட மூலாதாரம், Mersal/Thenandal Films

3. 'ஆளப்போறான் தமிழன்'

மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றது இப்பாடல்.

யூட்யூபில் சோனி மியூசிக் சவுத் விவோ சேனலில் காணொளி பாடல் வெளியானதும் விறுவிறுவென யூட்யூப் பார்வைகள் உயர்ந்தன.

ஆறு நிமிடத்திற்கும் அதிகமான நீளத்தை கொண்டிருக்கும் இப்பாடலுக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

YouTube பதிவை கடந்து செல்ல, 3
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 3

பாடலாசிரியர் விவேக்கின் வரிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பு கிடைத்துள்ளது. கைலாஷ் கெர், சத்ய பிரகாஷ், தீபக் பூஜா உள்ளிட்டோர் இப்பாடலை பாடியுள்ளனர்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில் வெளியான இப்பாடலுக்கு யூட்யூபில் 5.45 லட்சம் விருப்பங்களும் 38 ஆயிரத்துக்கும் அதிகமான கருத்துகளும் வெளியாகியுள்ளன.

இப்பாடலின் இசை, பாடல் வரிகள், நடனம் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றன

2017-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி யூட்யூபில் வெளியான இப்பாடல் இன்று வரை 91 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

ரௌடி பேபி

பட மூலாதாரம், Rowdy baby/ Wunderbar Films

4. 'ரௌடி பேபி'

வுண்டர்பார் ஸ்டுடியோஸ் யூட்யூப் சேனலில் வெளியிடப்பட்ட மாரி -2 திரைப்படத்தின் ரௌடி பேபி காணொளி பாடல் 105 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்பாடலுக்கு தனுஷ் பாடல் வரிகளை எழுதியுள்ளார். தனுஷ் மற்றும் தீ பாடியுள்ளனர்.

YouTube பதிவை கடந்து செல்ல, 4
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 4

பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி- 2 திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. இத்திரைப்படத்தின் ரௌடி பேபி காணொளி பாடல் கடந்த ஜனவரி 2-ம் தேதி யூட்யூபில் வெளியானது.

இதுவரை 1.1 மில்லியன் விருப்பங்களையும் 53 ஆயிரத்துக்கும் அதிகமான கருத்துகளையும் பெற்றுள்ளது.

ஜனி, பிரபு தேவா, பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் நடன இயக்குநராக பணிபுரிந்த இப்பாடலில் நடிகை சாய் பல்லவி மற்றும் தனுஷ் ஆகியோரின் நடனம் பலரையும் ஈர்த்துள்ளது. மிகக்குறுகிய காலத்தில் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ள தமிழ் சினிமா பாடல் இது.

ஒய் திஸ் கொலைவெறி டி

பட மூலாதாரம், dhanush/sony music india

1. 'ஒய் திஸ் கொலைவெறி டி'

ஏழாண்டுகளுக்கு முன்னர் நவம்பர்16,2011 அன்று சோனி மியூசிக் இந்தியா தளத்தில் வெளியான ஒய் திஸ் கொலைவெறி டி பாடல் 174 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

தனுஷ் எழுதி அநிருத் இசையமைத்து வெளியான இப்பாடல் இந்தியாவை தாண்டி பிற நாடுகளிலும் வைரலானது. இந்திய அளவில் யூட்யூபில் 2011 ஆண்டு பல சாதனைகளை படைத்தது ஒய் திஸ் கொலைவெறி டி.

YouTube பதிவை கடந்து செல்ல, 5
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 5

தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து 'தங்கிலீஷில்' எழுதப்பட்ட பாடல் தமிழர்களை தாண்டி பலரையும் ஈர்த்தது. எனினும் இப்பாடல் வெளியான சமயம், பாடலில் தமிழ் மொழியை சிதைத்துவிட்டதாக சிலர் குற்றம்சாட்டினர்.

இதுவரை 1.26 மில்லியன் விருப்பங்களையும், 1.14 லட்சம் கருத்துகளையும் பெற்று அதிக அளவில் பார்வைகளை பெற்ற 'தமிழ் சினிமா' பாடலாக விளங்குகிறது. இசை கோர்க்கும் அரங்கில் பாடல் தயாரிக்கும் காட்சிகளை கொண்டு உருவாக்கப்பட்ட இக்காணொளி பாடல் அதிக வரவேற்பை பெற்றிருந்தாலும், 3 - திரைப்படத்தில் இடம்பெற்ற இதே பாடலின் காணொளி வடிவமானது யூட்யூபில் 26 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: